உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 19, 2009

தொடர் மழையால் பாதித்த கிராமங்களில் மருத்துவ முகாம்: கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

சிறுபாக்கம் :

                       தொடர் மழையால் பாதித்த கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என மங்களூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.மங்களூர் ஒன்றியக்குழு கூட்டம் நேற்று நடந்தது. துணை சேர்மன் சின்னசாமி தலைமை தாங்கினார்.ஆணையர்கள் திருமுருகன், ஜெகநாதன், பொறியாளர் மணிவேல் முன் னிலை வகித்தனர். கூட்டத்தில் ஆறு தங்களாக நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் எதுவும் நடக்கவில்லை.அடிப் படை வசதிகள் நிறைவேற்றாமல் உள்ளதாக கவுன்சிலர்கள் பொன் முடி, ராஜன் தெரிவித்தனர். மேலும் பிற்பட்டோர் மானிய நல நிதியின் கீழ் திட்டப் பணிகளை டெண் டர் அறிவித்ததை  இதுவரை தகவல் தெரிவிக்கவில்லை. இதனால் தங் கள் பகுதியில் நடக்கும் வேலை விபரம் கவுன்சிலர்களுக்கு தெரியாத நிலை உள்ளதாக கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.இதற்கு பதிலளித்த துணை சேர்மன், வரும் ஆண்டியில் புதிய நிதி வந்ததும் கவுன்சிலர்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி உரிய நிதி ஒதுக்கப் படும்.
 
                              இனி டென்டர் வைக்கும்போது, அதற் கான தகவல் கவுன்சிலர்களுக்கு தெரிவிக்கப்படும் என்றார்.கவுன்சிலர் சேகர் பேசுகையில், அண்மையில் பெய்த தொடர் மழையால் கிராமங்களில் தொற்று நோய் பரவி மக்கள் பாதிக்கப்பட் டுள் ளதால் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும். மழையால் பாதித்த மானாவாரி பயிர்களை பார்வையிட்டு நிவாரணம் வழங்க வேண் டும் என கவுன்சிலர்கள் கூட்டாக  முறையிட்டனர்.


                        இதுகுறித்து கலெக்டர் மற்றும் மாவட்ட திட்ட அலுவலருக்கு தெரியப்படுத்துவதாக ஒன்றிய ஆணையர் திருமுருகன் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior