உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 19, 2009

அகதிகள் முகாம்களை மேம்படுத்த ரூ.30.98 லட்சம் ஒதுக்கீடு: கலெக்டர்

கடலூர் :

                     மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 30.98 லட்சம் அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

                           மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் புதிய குடிநீர் குழாய்கள், வீடுகளுக்கு மின் விளக்குகளை பழுது நீக்குதல், புதிய மின் கம் பம் அமைத்தல் மற்றும் புதிய கழிவறை அமைப் பது உள்ளிட்ட மேம் பாட்டு பணிகளுக்கு அரசு 30.98 லட் சம் ஒதுக்கீடு செய் துள்ளது.இதில் காட்டுமன்னார்கோவில் முகாமிற்கு 8.33 லட்சம், குறிஞ்சிப்பாடி 6.80, விருத்தாசலம் 9.20, அம் லவாணன்பேட்டை 6.65 லட்சம் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


                          மேலும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 532 பேருக்கு அடை யாள அட்டையும், மூன்று முகாம்களில் 465 பேருக்கு இலவச கலர் டிவியும், கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு இலவச பஸ் பாஸ், 45 பேருக்கு ஓட்டுநர் உரிமம் ஊனமுற்றோர் 38 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட் டுள்ளது. அவர்களில் 23 பேருக்கு உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  முகாம்களில் உள்ள இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior