பண்ருட்டி,:
பண்ருட்டியில் உழவர் சந்தை செயல்படுத்துவது குறித்து கலந்தாய்வு கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.
பண்ருட்டி உழவர் சந்தை மார்க்கெட்டிற்கும், பஸ் நிலையத்திற்கும் வெகு தொலைவாக உள்ளதால் பொதுமக்கள், உழவர்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் கலெக்டர் உத்தரவின் பேரில் உழவர் சந்தையை மீண்டும் திறந்து செயல்படுத்துவது குறித்து அதிகாரிகள், விவசாயிகள், வியாபாரிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமை தாங்கினார். சேர்மன் பச்சையப்பன், துணை சேர்மன் கோதண்டபாணி, தாசில்தார் பன்னீர்செல்வம், பொறியா ளர் சுமதி செல்வி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட வேளாண் துணை இயக்குனர் தனவேல், வேளாண்மை உதவி இயக்குனர் ஹரிதாஸ், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர்கள் ராமலிங்கம், பிரேமா, வியாபாரிகள் சங்க செயலாளர் ராஜேந்திரன், காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் ராஜா, கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட் டோர் பங்கேற்றனர். முன்னதாக உழவர் சந்தை, மார்க்கெட் கமிட்டி ஆகிய இடங்களை பார்வையிட்டனர்.
பின்னர் ஆர்.டி.ஓ., முருகேசன் கூறுகையில்,
"தற்போது உழவர் சந்தை இடம் நகரத்தை விட்டு தூரமாக உள்ளது. உடனடியாக செயல்படுத்த வேண்டுமானால் மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் செயல்படுத்தினால் வசதியாக இருக்கும் என ஆலோசனை தெரிவித் துள்ளனர். போக்குவரத்து சீரமைப்பது, வாகனங்கள் எண்ணிக்கை குறித்து போக்குவரத்து போலீசாரிடம் தகவல் தரும்படி கோரப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக