உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 07, 2010

அண்ணாநகர் போலீஸ் உதவி கமிஷனர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு

கடலூர்: 

          மகன் சாவிற்கு போலீஸ் அதிகாரி  காரணம் என, தந்தை கொடுத்த புகாரின் பேரில் தற்கொலைக்கு தூண்டியதாக சென்னை அண்ணாநகர் போலீஸ் உதவி கமிஷனர் மீது ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

             கடலூர் அடுத்த கீழ்குமாரமங்கலம் காளிக்கோவில் தெருவைச் சேர்ந்தவர் நடேசன். இவரது மகன் கார்த்திகேயன். இவருக்கும் புதுச்சேரி அடுத்த முருகம்பாக்கம் ராஜலட்சுமி என்பவருக்கும் 2005ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன் ராஜலட்சுமிக்கு அவரது அக்கா கணவர் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த மதி என்பவருடன் தொடர்பு இருந்துள்ளது.  இது கார்த்திகேயனுக்கு தெரிய வந்ததால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால், ராஜலட்சுமி, தனது கணவர் கார்த்திகேயன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் கார்த்திகேயன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மீது கடலூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 

             இன்ஸ்பெக்டராக இருந்த மதி தனது செல்வாக்கை பயன்படுத்தி அடிக்கடி கார்த்திகேயனையும், அவரது குடும்பத்தினரையும் மிரட்டினார். தொடர் மிரட்டலாலும், வழக்கில் தனக்கு எதிரான தீர்ப்பு வந்து விடுமோ என்ற அச்சத்தினாலும்  மனமுடைந்த கார்த்திகேயன் நேற்று இரவு அவரது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து கார்த்திகேயனின் தந்தை நடேசன் கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி போலீசில் கொடுத்துள்ள புகாரில், 

             "தற்போது சென்னை அண்ணாநகரில் போலீஸ் உதவி கமிஷனராக பணியாற்றி வரும் ஏ.வி.மதி தனது மகனை தொடர்ந்து மிரட்டி வந்ததால் தற்கொலை செய்து கொண்டார். எனவே சென்னை அண்ணாநகர் போலீஸ் உதவி கமிஷனர் மதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார். அதன் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் மதி மீது 306 பிரிவின் கீழ் (தற்கொலைக்கு தூண்டியதாக) வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior