புவனகிரி :
புவனகிரி பகுதியில் இரண்டாம் நாளாக நேற்று மழை பெய்ததால் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.
புவனகிரியிலிருந்து கடலூர் மற்றும் விருத்தாசலம் செல்லும் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் துவங்கியது. மழை விட்டு விட்டு பெய்ததால் ஆக்கிரமிப்புகள் அகற்றிய இடத்திலிருந்த மணல், கம்பிகள் மற்றும் கற்குவியல்களை முழுமையாக அகற்றவில்லை. இந்நிலையில் இரண்டாம் நாளாக நேற்றும் மழை நீடித்ததால் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. நேற்று முன்தினம் ஆக்கிரமிப்புகள் அகற்றிய இடத்தில் இருந்த கற்குவியல்களை பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றப் பட்டது.
புவனகிரி-கடலூர் தேசிய நெடுஞ்சாலையின் இடதுபுறத்தில் சாலையின் பின்புறம் கழிவு நீர் கால்வாய் வசதி இருந்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக தேசிய நெடுஞ்சாலை அருகிலேயே மிக நீளமான கழிவு நீர் கால்வாய் கட்டியதால், சில ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் சிக்கிய கட்டடங்கள் தற்போது எவ்வித சேதமில்லாமல் தப்பின.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக