சிறுபாக்கம் :
சிறுபாக்கம்- கழுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்திட முன்னாள் எம்.பி., கோரிக்கை விடுத் துள்ளார்.
இது குறித்து தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் கணேசன், சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து வழங்கிய மனு:
மங்களூர் ஒன்றியத்தைச் சேர்ந்த கழுதூர் மற்றும் சிறுபாக்கம் ஊராட்சிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. சுமார் 80 கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் ஏழை, எளிய மக்களே அதிகம் வசித்து வருகின்றனர். குக்கிராம மக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படும் சமயங்களில் மேல் சிகிச்சைக்காக சேலம் மாவட்டம் ஆத்தூர், விருத்தாசலம் பகுதிகளிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு 60 கி.மீ., தூரம் செல்ல வேண்டியுள்ளது.
இதனால் நேர விரயமும், பண விரயமும் ஏழை மக்களுக்கு ஏற்படுவதால் மக்கள் கடுமையாக அவதியடைகின்றனர். எனவே பின் தங்கிய பகுதியில் அமைந்துள்ள கழுதூர் மற்றும் சிறுபாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத் தப்படுத்தப்பட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக