விருத்தாசலம் :
கடலூர் மாவட்டத்தில் ஆடு அறுக்கும் கூடம் கட்டப்பட்டு பயன்படுத்தாமல் பெரும்பாலான இடங்களில் திறந்த வெளியில் ஆடுகளை அறுக்கும் அவலம் நடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் பல லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கூடம் பயனற்ற நிலையில் உள்ளது.
சுகாதார சீர்கேட்டைத் தடுக்கும் வகையிலும் பொதுமக்களுக்கு தரமான, சுத்தமான ஆட்டிறைச்சிகள் கிடைக்க வழி வகை செய்யும் வகையில் கடலூர் மாவட்டத்தில் கடலூர், விருத்தாசலம், சிதம்பரம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் உள்ளிட்ட இடங்களில் ஆடு அறுக்கும் கூடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இக் கூடங்களில் நோய் வாய்பட்ட ஆட்டிறைச்சி விற்பனையை தடுக்கும் வகையில் கால்நடை டாக்டரைக் கொண்டு ஆடுகளை பரிசோதிக்கும் நடைமுறையும் உள்ளது. டாக்டர் அனுமதித்த பின்னர் தான் அந்த ஆட்டினை அறுத்து அதன் இறைச் சியை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண் டும்.
ஆனால் இந்த நடைமுறைகள் எந்த ஊரிலும் பின்பற்றப்படுவதில்லை. மாறாக சாலையோரங்களிலும், தெருக்களிலும் ஆடுகள் அறுத்து விற்பனை செய்யப்படுகிறது. இதனை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. விருத்தாசலம் நகரில் காட்டுக்கூடலூர் ரோட்டில் உள்ள நவீன ஆடு அறுக்கும் கூடம் நகராட்சி பகுதி திட்டம் 2008- 09ம் ஆண்டு நிதியின் கீழ் 27 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இங்கு ஆடுகள் அறுப்பதற்கு தனி கட்டடம், ஆடுகளை பரிசோதிக்கும் டாக்டருக்கு தனி கட்டடம், கழிவறை, தண்ணீர் வசதி, காம்பவுண்டு சுவர் என அனைத்து வசதிகளும் உள்ளது.
இந்தக் கூடம் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டு, இரண்டு மாதங்களாக பயன்பாட் டிற்கு வந்துள்ளது. விருத்தாசலத்தில் 22க்கும் மேற் பட்ட வியாபாரிகள் உள்ளனர். நாள் ஒன்றுக்கு 100க்கும் அதிகமான ஆடுகள் இறைச்சிக்காக அறுக்கப்படுகிறது. இருந்தும் நாள் ஒன்றுக்கு ஐந்திற்கும் குறைவான ஆடுகளே இந்த கூடத்தில் அறுக்கப்படுகிறது. மற்ற வியாபாரிகள் அனைவரும் தாங்கள் கடை வைத்துள்ள இடங்களிலேயே அறுத்து விற்பனை செய்கின்றனர்.
இதனால் நகரத்தில் சுகாதார சீர்கேடு அதிகரிப்பதோடு, நகராட்சிக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. அதேப்போன்று நெல் லிக்குப்பம் மார்க் கெட்டில் 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட கூடமும் பயன்படுத்தப்படாமல் உள்ளது. கடலூரில் ஆடு அறுக்கும் கூடம் பயன்பாட்டில் இருந்தாலும் பெரும்பாலானோர் கடலூர் - நெல்லிக்குப்பம் மெயின்ரோடு, திருவந் திபுரம் சாலை மற்றும் செம் மண்டலம் ஆகிய இடங் களில் சாலையோரத் திலேயே கடைகள் அமைத்து அங்கேயே அறுத்து விற்பனை செய் கின்றனர்.
சிதம்பரத்திலும் சொற்ப அளவிலான வியா பாரிகளே கூடத்தை பயன் படுத்துகின்றனர். ஸ்ரீமுஷ் ணத்தில் பழைய கட்டடம் இருந்தும் கடந்த சில ஆண் டுகளுக்கு முன் 12 ஆயிரம் ரூபாய் செலவு செய்து புதுப்பிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் கடைக் கும் ஆடு அறுக்கும் கூடத்திற் கும் ஒன்னரை கி.மீ., தூரம் இருப்பதால் வியாபாரிகள் அங்கு சென்று அறுப்பதில்லை.
பயன்படுத்தாததன் காரணம் குறித்து இறைச்சி வியாபாரிகள் கூறுகையில்,
"கூடத்தில் நல்ல வசதிகள் உள்ளன. இருந்தும் ஆடுகளை தொங்க விட்டு அறுக்க போதுமான கம்பிகள் இல்லை. அதேப் போல் தரையில் டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளதால் கொஞ்சம் தண்ணீர் ஊற்றினாலே வழுக்கி விழும் அபாயம் உள்ளது. குறைகளை அதிகாரிகள் சரி செய்து கொடுத்தால் பயன் படுத்துவோம்' என்கின்றனர்.
நகராட்சி அதிகாரிகள் வியாபாரிகளின் சிறிய குறைகளை போக்கி, கட்டாயமாக கூடத்தில் தான் ஆடுகளை அறுக்க வேண் டும் என உத்தரவிட வேண் டும். மேலும் டாக்டர்களைக் கொண்டு ஆடு களை அறுப்பதற்கு முன் கட்டாயமாக பரிசோதிக்க வேண்டும். அப்போதுதான் சுகாதார சீர் கேட்டை கட்டுப்படுத்த முடியும் என்பதோடு, மாவட்டத் தில் ஒவ்வொரு ஊரிலும் 20 லட்சம், 27 லட்சம் என பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டடங்களும் முழு பயன்பாட்டிற்கு வரும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக