உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 23, 2010

தமிழகத்தில் வனப்பகுதியின் பரப்பளவு குறைந்து வருகிறது: அறிவியல் தொழில்நுட்ப மன்றச் செயலர்

சிதம்பரம்:
 
             தமிழகத்தில் வனப்பகுதியின் பரப்பளவு குறைந்து வருவதால் மாணவர்கள் அதிகளவில் மரக்கன்றுகளை நட வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்ற மாநில உறுப்பினர் எஸ்.வின்சன்ட் தெரிவித்துள்ளார்.
 
              சிதம்பரத்தை அடுத்த சுனாமி பாதிக்கப்பட்ட கிள்ளை பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் ஈரநிலம் அறக்கட்டளை, கெட் பசுமை அமைப்பு மற்றும் கிள்ளை பேரூராட்சி ஆகியன இணைந்து "புவியைக் காப்போம்' என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த 100 மீட்டர் நீள துணியில் மரம் நடுவது, பிளாஸ்டிக் பொருளினால் ஏற்படும் தீமை உள்ளிட்டவை குறித்த ஒவியம் வரைதல் மற்றும் மரக்கன்று நடும் விழா ஆகியன ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
              
             கிள்ளை பேரூராட்சித் தலைவர் எஸ்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். ஈரநிலம் அறக்கட்டளை தலைவர் ஓவியர் ந.தமிழரசன் வரவேற்றார். துணைத்தலைவர் கே.பரமதயாளன் முன்னிலை வகித்தார். 
 
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றச் செயலர் எஸ்.வின்சன்ட், ஓவியம் வரைதல் மற்றும் மரக்கன்று நட்டு விழாவை தொடங்கி வைத்துப் பேசியது:
 
                   தமிழகத்தில் முன் 33 சதவீத பரப்பளவு வனப்பகுதி இருந்தது. தற்போது அவை அழிந்து 22 சதவீதமாக குறைந்துள்ளது. பள்ளியில் உள்ள ஒரு மாணவன், 5 மரக்கன்றுகள் வீதம் நட்டால் 10 ஆண்டுகளில் மீண்டும் 33 சதவீத பரப்பளவு வனப்பகுதியாக மாறும்.
 
               இதை ஏற்கெனவே முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வலியுறுத்தி வருகிறார். மரங்கள் நடுவதால் நமக்கு ஆக்ஸிஜன், கார்பன்-டை-ஆக்ûஸடு கிடைக்கிறது. மழை மற்றும் இயற்கை சூழல் பாதுகாக்கப்படுகிறது. மகரந்தச் சேர்க்கை உருவாகிறது. மண் அரிப்பு தடுக்கப்படுகிறது. எனவே அனைவரும் மரக்கன்றுகளை அவசியம் நட வேண்டும் என எஸ்.வின்சன்ட் தெரிவித்தார்.÷கெட் பசுமை அமைப்பு நிறுவனத் தலைவர் உதவிப் பேராசிரியர் இரா.சரவணன் கருத்துரையாற்றினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior