உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், அக்டோபர் 20, 2010

சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள் 8 பேர் சஸ்பெண்ட்

சிதம்பரம்:

                  சிதம்பரத்தை அடுத்த சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 8 பேர் தாற்காலிக வேலைநீக்கம் செய்யப்பட்டதால் தொடர்ந்து போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

                       இருமுறை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியுற்றது.அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் போது, தொகுப்பு அலுவலர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்டோபர் 6-ம் தேதி முதல் எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

                  இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற அனைத்து கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர் சங்கத்தினருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் சர்க்கரை ஆலை ஊழியர்கள் அக்டோபர் 14-ம் தேதி முதல் வேலைக்கு திரும்ப முடிவெடுத்தனர்.இந்நிலையில் சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அக்டோபர் 14-ம் தேதி பணிக்கு சென்றபோது, தொழிúôற்சங்க மாநில நிர்வாகிகள் பாலகுருசாமி, வேலவன், பஞ்சநாதன், பரமசிவம், இளவரசன், எழிலன், ஆறுமுகம், ராமச்சந்திரன் உள்ளிட்ட 8 பேர் தாற்காலிக வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆலை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

                      இதையடுத்து வேலைநீக்கத்தை ரத்து செய்யக் கோரி தொடர்ந்து அக்டோபர் 18-ம் தேதி செவ்வாய்க்கிழமை வரை தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர் சங்கத்துக்கு ஆதரவாக அக்டோபர் 15-ம் தேதி விவசாய சங்கங்கள் பங்கேற்ற, ஆலை ஆட்சியர் ஆசியாமரியம் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் சேத்தியாத்தோப்பில் கோட்டாட்சியர் அ.ராமராஜு, டிஎஸ்பி ராமசந்திரன், வட்டாட்சியர் எம்.காமராஜ், ஆட்சியர் ஆசியாமரியம் உள்ளிட்டோர் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியுற்றது. இதனால் வேலைநிறுத்தப் போராட்டம் தீவரமடைந்துள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior