உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், அக்டோபர் 20, 2010

விருத்தாசலத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு : அதிகாரிகள் அக்கறை கொள்வார்களா?

விருத்தாசலம் : 

                     விருத்தாசலம் நகரத் தில் தினந்தோறும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் விருத்தாசலம் நகரமும் ஒன்று. இந்நகரத்தைச் சுற்றிலும் உள்ள ஏராளமான கிராமத்தைச் சேர்ந்தோர் நாள்தோறும் நகருக்கு வருகை தருவது அதிகரித்து வருகிறது. 

                     இதன் காரணமாக விருத்தாசலம் நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருகிறது. ஆனால் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான வழி முறைகள் குறித்து அதிகாரிகள் உறுதியான நடவடிக்கை எடுக்காததால் தினம்தினம் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்கள், பொதுமக்கள் என பலர் பாதிக்கப் படுகின்றனர்.

                   பஸ் நிலையத்தின் உள்ளே தள்ளு வண்டிகள் ஆக்கிரமிப்பு, இருசக்கர வாகனங்களை கண்ட இடங்களில் நிறுத்துவது இதனால் பஸ்கள் உள்ளே செல்ல முடியாமல் நெரிசல் ஏற்படுகிறது. பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு வெளியே வரும் பஸ்கள் பஸ் நிலையம் முன்புறம் உள்ள ஜங் ஷன் ரோட்டிலும் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றுகின்றனர். இதனால் பின்னால் வரும் வாகனங்கள் பஸ் நிலையத்திற்குள் செல்ல முடியாமல் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதற் குள் வாகனங்களின் அணிவகுப்பு அதிகரிக்கிறது.
 
                ஜங்ஷன் ரோட்டில் பஸ் நிலையத்தின் அருகி லேயே இரண்டு இடங்களில் வேகத்தடை போன்று  மெகா சைஸ் அளவில் சாக் கடை கால்வாய் அமைத் துள்ளனர். இதில் கனரக வாகனங்கள் ஏறி செல்ல முடியாமல் சில நேரங்களில் மணி கணக்கில் நின்று விடுவதால் நெரிசல் அதிகரிக்கிறது. நகரத்தின் பிரதான வீதியான கடைவீதியில் தினந்தோறும் காலை முதல் இரவு வரை மக்கள் கூட்டம்  இருக்கும் என்பதால் இச் சாலை ஒரு வழிச் சாலையாக மாற்றப் பட்டது. 

                  விருத்தாசலத்தில் இருந்து திட்டக்குடி, பெண்ணாடம் பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் கடைவீதி வழியாகவும், நகரத்திற்கு வரும் வாகனங்கள் பழைய தபால் நிலையம் அருகே உள்ள சாத்துகுடல் மேட்டுத் தெரு  வழியாக செல்லும்படி மாற்றி அமைக்கப்பட்டது. இந்த ஒரு வழிப்பாதை குண்டும் குழியுமாக இருப்பதாலும், இட நெருக்கடியாக இருப்பதாலும் டிரைவர்கள் இச்சாலையை பயன்படுத்தாமல் எப்போதும் போல் கடைவீதி  வழியாகவே நகரத் திற்குள் வருகின்றனர். இதனால் கடைவீதியிலும் போக்குவரத்து நெரிசல் குறைந்த பாடில்லை.

                  கடலூர் ரோட்டில் ஸ்டேட் பாங்க் எதிரில் இருபுறங்களிலும் இருந்து வரும் பஸ்கள் ஒரே இடத்தில்  நின்று பயணிகளை ஏற்றி செல்லும். இதை தடுக்க சில வாரங்களுக்கு முன் ஆர்.டி.ஓ., அலுவலகம் எதிரில் தான் கடலூர் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் நிற்க வேண்டும் என போக்குவரத்து போலீசார் அறிவித்தனர். ஆனால் இதனை யாரும் கடை பிடிப்பது இல்லை. போலீசாரும் கண்டு கொள்வது கிடையாது. ஜங்ஷன் ரோடு, கடை வீதிகளில் கடைகளுக்கு லோடுகள் இறக்கும் லாரிகளை ரோட்டிலேயே நிறுத்தி இறக்குகின்றனர். போக்குவரத்து நெரிசலை குறைக்க நகரத்தில் பாலக் கரை, கடை வீதியில் சிக் னல்கள் அமைக்கப் பட்டது.

                        பாலக்கரையில் அமைக் கப்பட்ட சிக்னல்கள் பாலம் கட்டும் பணிக்காக அகற்றப்பட்டது. இதுவரை மீண்டும் அமைக் கப் பட வில்லை. கடைவீதியில் உள்ள சிக்னல்கள் பல ஆண்டுகளாகவே இயங்காமல் போக்குவரத்திற்கு பயனற்று தற்போது டிஜிட் டல் பேனர் கட்டுவதற்கு கம்பமாக பயன்படுகிறது. நகரத்தில் குடித்து விட்டு வாகனங்களில் செல்பவர்களை பிடித்து அவர்களிடம் "மாமூல்' கறப்பதில் அதிக ஆர்வம் காட்டும் போக்குவரத்து போலீசார், மக்கள் தினந் தோறும் பாதிக்கப்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கவனம் செலுத்துவதில்லை. பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் விருத்தாசலம் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior