கடலூர்:
வீடுகளில் பிரசவம் நடைபெறுவது தவிர்க்கப்பட்டு, அரசு ஆரம்ப சுதாதார நிலையங்களில் பிரசவங்கள் அதிகரிக்க வேண்டும் என்று, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டார்.
திட்டக்குடி அருகே பெண்ணாடத்தில் 62 லட்சத்தில் கட்டப்பட்ட மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடத்தை, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
பின்னர் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியது:
பெண்ணாடம் ஆரம்ப சுகாதார நிலையம் 30 படுக்கை வசதி கொண்டதாக, தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. 5 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் இந்த சுகாதார நிலையம் செயல்படும். மருத்துவத் துறையில் தமிழகம் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது. மருத்துவர்கள் தொண்டு உள்ளத்துடன் செயல்பட வேண்டும்.
வீடுகளில் பிரசவம் நடைபெறுவதால் தாய்- சேய் மரணம் மற்றும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதைத் தவிர்க்க, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்கள் அதிகரிக்க வேண்டும். தமிழகத்தில் முத்துலட்சுமி ரெட்டி நினைவு திருமண உதவித் திட்டத்தில் 2,07,507 பேருக்கு |1200 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டு உள்ளது. பெண்ணாடம் பேரூராட்சியில் 4671 கலர் டிவிக்கள் வழங்கப்பட்டு உள்ளன. மங்களூர் ஒன்றியத்தில் இதுவரை 91,382 குடும்பங்களுக்கு கலர் டிவிக்களும் 10 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச எரிவாயு அடுப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
ந ல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இந்த ஆண்டு 3.46 லட்சம் பேர் சிகிச்சை பெற்று உள்ளனர். 8,265 உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று உள்ளனர். நல்லூர் ஒன்றியத்தில் மகப்பேறு உதவித் திட்டத்தில் 5,922 பேருக்கு தலா 6 ஆயிரம் வழங்கப்பட்டு உள்ளது என்றார் அமைச்சர். கணபதிக்குறிச்சியில் 29.17 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடத்தையும் அமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். நிகழ்ச்சிகளில் மருத்துவம் மற்றும் குடும்பநலத் துறை முதன்மைச் செயலாளர் வி.கே.சுப்புராஜ், மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன், பொது சுகாதாரத் துறை இயக்குநர் பொற்கை பாண்டியன், துணை இயக்குநர் ஆர்.மீரா, மங்களூர் எம்.எல்.ஏ. கு.செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக