கடலூர் :
கடலூரில் ஓய்வெடுத்த முதல்வர் கருணாநிதி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து கலெக்டரிடம் கேட்டறிந்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் நடக்கும் குடும்ப நிகழ்ச்சி மற்றும் மாலை நாகையில் நடைபெறும் கட்சி பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் கருணாநிதி சென்னையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக திருவாரூர் புறப்பட்டார். கடலூர் மாவட்ட எல்லையான ரெட்டிச்சாவடியில் மாவட்ட தி.மு.க., சார்பில் அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் முதல் வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. எம்.எல்.ஏ.,க்கள் அய்யப்பன், சபா ராஜேந்திரன், கடலூர் சேர்மன் தங்கராசு, ஒன்றிய செயலாளர் ஜெயபால் மற்றும் கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். பின் அங்கிருந்து புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு கடலூர் விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அங்கு அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
கலெக்டர் சீத்தாராமன், எஸ்.பி., அஷ்வின் கோட் னீஸ், டி.ஆர்.ஓ., நடராஜன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். விருந்தினர் மாளிகையில் சற்று நேரம் ஓய்வு எடுத்த முதல்வர், பின் கலெக்டர் மற்றும் அதிகாரிகளை அழைத்து மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் "கலைஞர் வீடு' வழங் கும் திட்டப் பணிகள் குறித்து விசாரித்தார். பின் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்த அவர் மாலை 6.50 மணிக்கு சிதம்பரத்திற்கு காரில் புறப்பட்டுச் சென்றார். இரவு 8 மணிக்கு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணை வேந்தர் மாளிகையில் ஓய்வெடுக்க வந்த முதல்வர் கருணாநிதியை, பதிவாளர் ரத்தினசபாபதி வரவேற்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக