நெய்வேலி:
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூலம் சென்னை, திருச்சி, திருநெல்வேலி நகரங்களில் செயல்படும் அறிவியல் மையங்களைப் போன்று நெய்வேலி நகரிலும் அறிவியல் மையம் நிறுவவேண்டும் என்று நெய்வேலி கிளை அறிவியல் இயக்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நெய்வேலி கிளை செயற்குழுக் கூட்டம் நெய்வேலி வட்டம் 18-ல் உள்ள இதர பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பிற தீர்மானங்கள் வருமாறு:
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியரிடையே பேச்சு, பாட்டு, வினாடி-வினா, செயல்திறன் உள்ளிட்ட சிறப்புப் போட்டிகளை இம்மாதம் 24-ம் தேதி நடத்துவது, மாநிலம் முழுவதும் பள்ளி மாணவ, மாணவியருக்கான துளிர் திறனறிதல் போட்டியை நவம்பர் 13-ல் நடத்தவது, இதுதொடர்பாக அந்தந்தப் பள்ளிகளில் மாணவர்கள் 10 செலுத்தி பெயரை பதிவு செய்துகொள்ள அறிவுறுத்துவது, துளிர் இல்லத் தொடக்க விழாவை என்எல்சி பெண்கள் மேநிலைப் பள்ளியில் இம்மாதம் 15-ம் தேதி நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு செயற்குழு உறுப்பினர் சின்னப்பன் தலைமை வகித்தார். கிளைச் செயலர் தாமோதரன் ஆண்டறிக்கை வாசித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக