உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 25, 2010

கடலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீரை செறிவூட்ட ரூ.1.55 கோடி ஒதுக்கீடு

திட்டக்குடி : 

                நிலத்தடி நீரை செயற்கையாக செறிவூட்ட 1.55 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கண்காணிப்பு பொறியாளர் நஞ்சன் தெரிவித்தார். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் வெலிங்டன் ஏரி 29.71 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கரை சீரமைப்பு பணி நடந்து முடிந்தது. 

                 தற்போது பெய்து வரும் பருவமழை நீர் வெள் ளாற்று வழியாக தொழுதூர் அணைக்கட்டிலிருந்து வெலிங்டன் ஏரிக்கு திருப்பி விடப்பட்டு நீர்ப்பிடிப்பு செய்யப்படுகிறது. நேற்று தொழுதூர் அணைக்கட்டிலிருந்து வினாடிக்கு 1,060 கன அடி வீதம் திறந்து விடப்பட்டது. மதியம் 12 வரை வெலிங்டன் ஏரியில் 1,038.38 மில்லியன் கன அடி நீர்ப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை வெள்ளாறு வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் நஞ்சன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது வெள்ளாறு வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் நஞ்சன் கூறியது: 

                    வெலிங்டன் ஏரி கரை சீரமைப்பு பணி நிறைவு பெற்று நீர்ப்பிடிப்புடன் காண்பதால் மனநிறைவு ஏற்பட்டுள்ளது. இன்னும் 10 நாட்களில் ஏரியின் முழு உயரத்தில் 24 அடி நீர்ப்பிடிப்பு செய்யலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதன்பின் கலெக்டரிடம் அனுமதி பெற்று தண்ணீர் திறந்து விடப்படும். ஷட்டர்கள், வாய்க்கால்களை பழுது நீக்கவும், தேவைப்படின் புதுப்பிக்கவும் 70 லட்சம் ரூபாய் கூடுதல் நிதி பெறப்பட்டுள்ளது.
 
               கடலூர் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகள் ஏதும் இல்லை. மொத்தமுள்ள 420 ஏரிகளில் 97 ஏரிகளில் மட்டுமே முழுமையாக தண்ணீர் நிறைந்துள்ளது. 105 ஏரிகளில் 75 சதவீதமும் மீதமுள்ள ஏரிகளில் 50 சதவீதத்திற்கும் குறைவாக தண்ணீர் நிறைந்துள்ளது. வெள்ளாறு, கெடிலம் ஆற்றுப்பகுதிகளில் வெள்ளத்தடுப்பு சுவர் அமைக்க 233 கோடி ரூபாய்க்கு நாளை டெண்டர் அறிவித்து, டிசம்பர் 30ல் தெரிவிக்கப்பட்டு பணிகள் விரைவில் துவங்கும். நீர்வளம், நில வள திட்டத்தில் பணிகளை மேற்கொள்ள அரசாணை பெறப்பட்டுள்ளது. 

              உலக வங்கி நிதியுதவியுடன் 40 லட்சம் ரூபாயில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, பண்ருட்டி, வடலூர் மற்றும் விருத்தாசலம் பகுதிகளில் இப்பணிகள் நடைபெற உள்ளது. இதற்கு விவசாயிகளின் பங்களிப்பு அவசியம் தேவை. நிலத்தடி நீரை செயற்கையாக செறிவூட்ட பண்ருட்டி அடுத்த கீழிருப்புக்கு  40 லட்சமும், சங்கராபுரம் அடுத்த புதுப்பாலப்பட்டு பகுதிக்கு 1 கோடியே 15 லட்சமும் நிதி பெறப்பட்டுள்ளது. இவ்வாறு நஞ்சன் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior