உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 25, 2010

சிதம்பரம் நகரில் ஓராண்டாகியும் முடிவுறாத வடிகால் பாலப்பணி


சிதம்பரம் கோவிந்தசாமிதெருவில் பாதியில் நிறுத்தப்பட்ட தில்லையம்மன் வடிகால் வாய்க்கால் பாலம்.
 
சிதம்பரம்: 

              சிதம்பரம் நகரில் வடிகால் பாலம் அமைக்கும் பணி தொடங்கி ஓராண்டுக்கு மேலாகியும் முடிவுறாததால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

               வெள்ளச் சேதத்தை தடுத்த நகர்மன்ற உறுப்பினர் இரா.வெங்கடேசன் கோரியதன் பேரில் சிதம்பரம் பஸ் நிலையம் அருகாமையில் உள்ள கோவிந்தசாமித் தெருவில் ஓராண்டுக்கு முன் ரூ.33 லட்சம் செலவில் தில்லையம்மன் வடிகால் வாய்காலின் குறுக்கே பாலம் அமைக்கும் பணி தொடங்கியது.

               பாலம் அமைப்பதற்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றுவது உள்ளிட்ட காரணங்களால் பணிகள் தாமதமானது.  பின்னர் அதற்கு தீர்வு ஏற்பட்டு தற்போது ஒப்பந்தக்காரரால் பணி விரைந்து முடிக்கப்படாததால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பாலம் அமைக்கும் பணியினால் கோவிந்தசாமித் தெரு முற்றிலும் துண்டிக்கப்பட்டு அப்பகுதியில் வசிக்கும் மக்களும், அச்சாலை வழியாக முத்தையாநகர், மீதிகுடி, கோவிலாம்பூண்டி, சிதம்பரம்நாதம்பேட்டை மற்றும் பல்வேறு நகர்களுக்கு செல்லும் பொதுமக்கள் பல்வேறு சாலைகள் வழியாக சுற்றிச் செல்லும் நிலை உள்ளது.

                தற்போது மழை தொடர்ந்து பெய்து வருவதால் அப்பாலத்தின் கட்டமைப்பின்மீது நீர் சூழ்ந்து குட்டை போல் காட்சியளிக்கிறது. மேலும் அப்பகுதியில் நீர்வடிய வாய்ப்பில்லாததால் சாலைகளில் நீர் தேங்கியுள்ளது. எனவே தில்லையம்மன் வடிகால் வாய்க்கால் பாலத்தை விரைந்து கட்டி முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 கருத்துகள்:

  • jaffar says:
    25 நவம்பர், 2010 அன்று 12:25 PM

    it is still we are facing the problem in subothaya nagar people plese do someing to the public thanks jaffar

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior