உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 25, 2010

அண்ணாமலை பல்கலை.யில் புதிய பாடம் அறிமுகம்: கவர்னர் பர்னாலா விண்ணப்பம் வெளியிட்டார்

சிதம்பரம்:
 
                   இந்திய நீரழிவு நோய்க்கான ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சென்னை டாக்டர் ராமச்சந்திரா நீரழிவு மருத்துவமனையுடன் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

               நிகழ்ச்சியில் அண்ணாமலை பல்கலை கழக வேந்தரும் தமிழக ஆளுனருமான சுர்ஜித்சிங் பர்னாலா கலந்து கொண்டு போஸ்ட் டிப்ளமோ இன் கிளினிக்கல் டயபெடொலஜி என்ற புதிய படிப்புக்கான விண்ணப்பத்தை வெளியிட்டார். தொலைதூரக் கல்வி வாயிலாக கற்பிக்கப்படும் இப்படிப்பானது அதிக நீரழிவு நோயாளிகள் உருவாகாமல் இருப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. உலகிலேயே இந்தியாவில் தான் அதிக நீரழிவு நோயாளிகள் உள்ளனர். இப்படிப்பினை கற்பதினால் நோயாளி களிடையே தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்து வதற்கு உதவுவதுடன் அதிகம் இந்நோய் வராமல் தடுக்கப்படுகிறது.

இதுபற்றி அண்ணா மலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ம.ராமநாதன் கூறியது:
 
               உலக சுகாதார அமைப்பு புள்ளி விபரத்தில் தற்போது இந்தியாவில் 50 மில்லியன் உள்ள நீரழிவு நோயாளிகள் வரும் 2030-ம் ஆண்டில் 80 மில்லியனாக உயரக்கூடும் என குறிப்பிட்டுள்ளது. இந்த நோய்க்கான மூலாதாரம் மற்றும் எதிர்த்து போராடக்கூடிய வல்லமை கொண்ட சத்துணவு மட்டுமின்றி பொருளாதாரம் மற்றும் மருத்துவ ரீதியாக இயன்ற அளவு இந்நோயை கட்டுப்படுத்துவதற்கும் இப்படிப்பு உதவுகிறது என்று கூறினார். சமூக விழிப்புணர்வு பாடத்தை அறிமுகப்படுத்திய ஐ.டி.ஆர்.எப். இயக்குனருக்கு அவர் பாராட்டை தெரிவித்தார்.

                        டாக்டர் ஏ. ராமச்சந் திரன் வரவேற்றார். தொலைதூரக்கல்வி இயக்கக இயக்குனர் டாக்டர் எஸ்.பி. நாகேஸ்வரராவ், அண்ணாமலை பல்கலைக் கழக மருத்துவ புல முதல்வர் பேராசிரியர் என். சிதம்பரம், டாக்டர் ராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior