உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 25, 2010

கடலூர் மாவட்டத்தில் கனமழை : தத்தளிக்கும் கடலூர் நகரம்


வடிகால் வசதி இல்லாததால், வன்னியர் பாளையம் பகுதியில் வீடுகளைச் சூழ்ந்துள்ள மழைநீர். வடிகால் வாய்க்கால்கள் அடைப்பட்டு கிடப்பதால் மழைநீர் தேங்கி, ஏரி போல் காட்சி அளிக்கிறது
 
கடலூர்:

          வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால், கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. டெல்டா பாசனப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

                பகல் நேரத்தில் சற்று வெயில் காய்வதும், மற்ற நேரங்களில் மேகமூட்டத்துடன் மழை பெய்வதுமாக உள்ளது. கடலூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. காலை 8 மணி வரையிலும் மழை நீடித்தது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

                  கடலூரில் தாழ்வானப் பகுதிகளில் மழைநீர் பெருமளவுக்குத் தேங்கி உள்ளது. கடலூரில் முறையான மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் இல்லாததால், சரவணன் நகர், துரைசாமி நகர், புதுநகர், கே.கே.நகர், வன்னியர்பாளையம், வண்ணாரப்பாளையம், எஸ்.எஸ்.ஆர். நகர், வரதராஜன் நகர், ரட்சகர் நகர், கூத்தப் சுப்புராயன் நகர் உள்ளிட்ட ஏராளமான நகர்களில் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது.

               சாலைகள் அபரிமிதமாக உயர்த்தப்பட்டப் பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகத் தொடங்கி இருக்கிறது. ஏராளமான மாநில நெடுஞ்சாலைகளும், தேசிய நெடுஞ்சாலையும் சேதம் அடைந்து வாகனப் போக்குவரத்துக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டு உள்ளது.வீராணம் ஏரியின் நீர் மட்டம் 45.5 அடி (மொத்த உயரம் 47.5 அடி), வீராணம் நேரடி பாசனப் பகுதிகளுக்கு 15 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. மற்ற ஏரிகள் நிரம்பி வழிகின்றன.

              வாலாஜா ஏரியில் இருந்து 1,509 கனஅடியும், பெருமாள் ஏரியில் இருந்து 2,215 கனஅடியும் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் இருந்து 12,466 கனஅடி நீர் வெள்ளாற்றில் திறந்து விடப்படுகிறது.

புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் முக்கிய ஊர்களில் பெய்துள்ள மழையின் அளவு (மில்லிமீட்டரில்) வருமாறு:

அண்ணாமலை நகர் 45 
கொத்தவாச்சேரி 42 
காட்டுமன்னார்கோயில் 41 
சிதம்பரம் 38 
லால்பேட்டை 33 
கடலூர் 32.7 
புவனகிரி 24 
வானமாதேவி 20.3 
சேத்தியாத்தோப்பு 20 
பண்ருட்டி, 19 
குப்பநத்தம் 2.6 
காட்டுமயிலூர் 12 
ஸ்ரீமுஷ்ணம் 10 
வேப்பூர் 9, 
பெலாந்துரை
விருத்தாசலம் 7
பரங்கிப்பேட்டை 19 
தொழுதூர் 8

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior