உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 25, 2010

கடலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிப் பகுதிகளில் சாலைப் பணிகளுக்கு ரூ. 16 கோடி ஒதுக்கீடு

கடலூர்:

                  கடலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிப் பகுதிகளில் சாலைப் பணிகளுக்கு, தமிழக அரசு ரூ. 16.15 கோடி நிதி ஒதுக்கி இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.
  
கடலூர் மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

                 தமிழகத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் சாலைப் பணிகளை மேற்கொள்ள சிறப்பு சாலைத் திட்டத்தில் ரூ. ஆயிரம் கோடி ஒதுக்கி முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். இதில் கடலூர், விருத்தாசலம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம் நகராட்சிகளில் சிமென்ட் மற்றும் தார்ச் சாலைகள் அமைக்க ரூ. 16.15 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

                கடலூரில் பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தி உள்ள பகுதிகளில், முதல் கட்டமாக 40 சாலைகள் அமைக்க ரூ. 10.18 கோடியும், 2-ம் கட்டமாக 75 சாலைகள் அமைக்க ரூ. 10.32 கோடியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணி ஆணைகளை நகராட்சித் தலைவர் து.தங்கராசு வழங்கினார். பணிகளை உடனே தொடங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். 

               மழை காலமாக இருப்பதால் தார்ச் சாலைப் பணிகள் 15-12-2010-க்கு பிறகு தொடங்க அறிவுறுத்தப்பட்டது. பண்ருட்டி நகராட்சிப் பகுதியில் ரூ. 1.33 கோடியில் தார்ச் சாலைகளும், ரூ. 1.39 கோடியில் சிமென்ட் சாலைகளும் அமைக்க பணி ஆணைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. பணிகளை உடனே தொடங்க உத்தரவிடப்பட்டது தார்ச் சாலைப் பணிகள் டிசம்பர் 15-க்கு மேல் தொடங்க அறிவுறுத்தப்பட்டது.

                  விருத்தாசாலம் நகராட்சியில் சிமென்ட் சாலைகள் ரூ. 80.10 லட்சத்திலும், தார்ச் சாலைகள் ரூ. 150.23 லட்சத்திலும் அமைக்க பணி ஆணை வழங்கப்பட்டது. நெல்லிக்குப்பம் நகராட்சியில் ரூ. 1.02 கோடியில் தார்ச் சாலைகள் அமைக்க பணி ஆணை வழங்கப்பட்டது.சிதம்பரம் நகாரட்சியில் சி.ஆர்.ஐ.பி.சி. திட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை மூலம் ரூ. 65  லட்சத்தில் மேலரத வீதி, சாலைப் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது. 

                   மேலும் இதே திட்டத்தில் சாலைப் பணி மற்றும் ரவுண்டானா மேம்பட்டுப் பணிகள் ரூ. 2.5 கோடியில் மேற்கொள்ள பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. அனைத்துப் பணிகளும் 31-3-2011-க்குள் நிறைவடையும் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior