உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 23, 2011

மாணவர்களுக்கான என்.எல்.சி. பஸ் பாஸ் கட்டணம் ரூ.100 ஆக உயர்வு

நெய்வேலி:

              நெய்வேலி நகரில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக சலுகைக் கட்டணத்தில் பஸ் பாஸ் வழங்கிய என்.எல்.சி. பஸ் பிரிவு இந்த ஆண்டு அக்கட்டணத்தை ரூ.100 ஆக உயர்த்தி அறிவிப்புச் செய்துள்ளது.

               மந்தாரக்குப்பம், தாண்டவன்குப்பம், வட்டம் 21, 28, 29, 30 பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நெய்வேலி நகரியத்தில் உள்ள பள்ளிகளில் பயின்று வருகின்றனர். இவர்கள் பள்ளிகளுக்குச் சென்று வர மேற்கண்ட பகுதிகளிலிருந்து என்.எல்.சி. பஸ் பிரிவு ரூ.15 சலுகைக் கட்டணத்தில் பஸ்களை இயக்கி வந்தது. இந்த பஸ் பாஸ்களை ஒவ்வொரு பள்ளி மூலமாக என்.எல்.சி. பஸ் பிரிவு விநியோகித்து வந்தது.

              இதனால் பல ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் பயனடைந்து வந்தனர்.÷இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பஸ் கட்டணம் திடீரென ரூ.100 ஆக அதிகரித்து என்.எல்.சி. பஸ் பிரிவு உத்தரவு பிறப்பித்து ஒவ்வொரு பள்ளிக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இது பெற்றோர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநில அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் கருதி இலவச பஸ் பாஸ் வழங்கி வருகிறது. ஆனால் ஆண்டுக்கு ஆயிரம் கோடிக்கு மேல் லாபமீட்டும் என்.எல்.சி. நிறுவனம் திடீரென பஸ் பாஸ் கட்டணத்தை உயர்த்தியிருப்பது வியப்பாக உள்ளது.

            பஸ் பிரிவை ஒரு சேவை நோக்குடன் நடத்தி வரும் என்.எல்.சி. நிறுவனம், நெய்வேலி நகர பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு குறைந்த கட்டணத்தில் (குறைந்தபட்சம் ரூ.2, அதிகபட்சம் ரூ.4) பஸ்களை இயக்கிவரும் என்எல்சி நிறுவனம், மாணவ, மாணவியரின் நலனில் ஏன் பாரபட்சம் காட்ட வேண்டும்? ஒரு அரசாங்கம் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கிவரும் வேளையில் சில ஆயிரம் மாணவர்கள் பெறுகிற இந்த கட்டணச் சலுகையை ஏன் உயர்த்த வேண்டும்? என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கேள்வி.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior