உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 23, 2011

கடலூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் விவசாயத்திற்கு ரூ.972 கோடி கடன்

கடலூர் : 

               கடலூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 972 கோடி ரூபாய் வங்கிகள் மூலம் கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என கலெக்டர் கூறினார்.. 

கடலூர் மாவட்ட வங்கியாளர்கள் கூட்டம் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கி கடன் திட்டத்தை வெளியிட்டு கூறியது: 

          கடலூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 2011 - 12ல் ஆண்டு கடன் திட்டம் 1,662.55 ரூபாய் கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வேளாண்மை வளர்ச்சிக்காக 1,150.86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த ஒதுக்கீட்டில் 69 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2010 - 11ம் ஆண்டில் ஆண்டு கடன் திட்டம் 1,448.50 கோடி ரூபாய். இந்த ஆண்டு 14.77 சதவீதம் வளர்ச்சியை திட்டமிட்டு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வேளாண்மை துறையில் 1,017.24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 1,041.89 கோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. 

              வேளாண்மை இல்லாத பிற திட்டங்களுக்கு 66.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 68.56 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு கடன் திட்டத்தின் மூலம் 3,73,335 பயனாளிகள் பயனடைய உள்ளனர். நடப்பு ஆண்டில் பயிர் கடனாக மட்டும் 972.64 கோடி ரூபாய் பயர் கடனாக வழங்கப்படவுள்ளது. வணிக வங்கிகளின் மூலம் 1,307.05 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு 1,752.72 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டுறவு வங்கிகளின் மூலம் 255.70 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் சீத்தாராமன் கூறினார்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior