உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 23, 2011

வேலைவாய்ப்புப் பதிவை பள்ளிகளிலேயே மேற்கொள்ளலாம்

கடலூர்:

             பிளஸ் 2 பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை 25-ம் தேதிமுதல் தங்கள் பள்ளிகளிலேயே மேற்கொள்ளலாம் என்று கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.அமுவல்லி அறிவித்துள்ளார்.

 இதுகுறித்து கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.அமுவல்லி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

              2011 மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பு அலுவலகம் சென்று பதிவு செய்ய வேண்டியதை, அவர்கள் படித்த பள்ளியிலேயே பதிவு செய்து கொள்ள தமிழக அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.  இணையதளம் மூலம் இப்பதிவு மேற்கொள்ளப்பட்டு, மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவு அட்டை வழங்கப்படும். ஏற்கெனவே 10-ம் வகுப்பு தேர்ச்சியை பதிவு  செய்தவர்களும், கூடுதல் கல்வித் தகுதியாக 12-ம் வகுப்பு தேர்ச்சியைப் பதிவு செய்து கொள்ளலாம்.  

              இதற்காக மாணவர்கள் தங்களது குடும்ப அட்டை, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்கள் எடுத்து வருதல் வேண்டும்.  இப் பதிவுக்காக எவரும் வேலைவாய்ப்பு அலுவலகத்துத்துச் செல்லத் தேவையில்லை. பிளஸ் 2 தேர்ச்சி பெறாதவர்கள் தற்போது பதிவு செய்ய இயலாது. இப்பதிவு பள்ளிகளில் 25-5-2011 முதல் 10-6-2011 வரை நடைபெறும். இந்த நாள்களில் எப்போது பதிவு செய்தாலும் 25-5-2011 அன்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ததாதக் கருதப்படும்.  மாவட்டக் கல்வித்துறையும், மாவட்ட வேலைவாய்ப்புத் துறையும் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளன என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior