உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 23, 2011

நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பம் விநியோகம்

நெய்வேலி:

            கடலூர் மக்களளவைத் தொகுதி உறுப்பினர் கே.எஸ்.அழகிரியின் முயற்சியால், நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியில் விண்ணப்ப விநியோகம் சனிக்கிழமை தொடங்கியது.

             நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவன ஆதரவுடன் செயல்படும் ஜவகர் கல்விக் கழகத்தின்கீழ் ஜவகர் அறிவியல் கல்லூரி கடந்த 1987-ம் ஆண்டுமுதல் செயல்படுகிறது. இக்கல்லூரியை அப்போது மத்திய இணையமைச்சராகவும், தற்போது மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் ப.சிதம்பரம் தொடங்கி வைத்தார். இக்கல்லூரியில் 9 இளங்கலைப் பட்டப் படிப்பும், 2 முதுகலைப் பட்டப்படிப்பு உள்ளது. 1,600 மாணவர்களுடன், 28 நிரந்தர பேராசிரியர்கள் மற்றும் 25 ஆசிரியர் அல்லாத பணியாளர்களும், 30-க்கும் மேற்பட்ட தாற்காலிக பேராசிரியர்களும் பணிபுரிகின்றனர். இந்நிலையில் கல்லூரி நடத்துவதில் அதிக செலவினங்கள் ஏற்படுவதாகவும்,மேலும் ஆண்டுக்காண்டு நஷ்டம் அதிகரித்து வருவதாகக் கூறி, நெய்வேலி ஜவகர் கல்விக்கழகம் கல்லூரியை மூடுவது தொடர்பாக கல்லூரி பேராசிரியர்களுக்கு நோட்டீஸ் வழங்கியதாகத் தெரிகிறது.

              மேலும் இந்த ஆண்டுக்கான இளங்கலைப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகத்தையும் நிறுத்திவைத்தது. இதற்கு பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  இந்நிலையில் திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் சந்திரசேகர், திங்கள்கிழமை கல்லூரிக்கு வந்து பேராசியர்களிடமும், ஜவகர் கல்விக்கழக நிர்வாகிகளிடமும் ஆலோசனை நடத்தினார். 

             இணை இயக்குநர் வருகையை அறிந்த நெய்வேலி தொழிற்சங்க நிர்வாகிகள் இணை இயக்குநரை சந்தித்து கல்லூரியை மூடக்கூடாது என வலியுறுத்தியதோடு, சுற்றுப்புற மாணவர்களின் நலனைக் கருத்தில் கல்லூரியை தொடர்ந்து நடத்த ஆவண செய்யவேண்டும் என்றனர். கல்லூரியின் பேராசிரியர்கள் நலச் சங்க நிர்வாகி ராஜேந்திரன், கல்லூரியில் நடைபெறும் நிர்வாகச் சீர்கேடு தொடர்பான மனுவையும் இணை இயக்குநர் சந்திரசேகரிடம் வழங்கினார். 

             இந்நிலையில் கடலூர் எம்.பி. கே.எஸ்.அழகிரி, மே 18-ம் தேதி என்.எல்.சி. தலைவர் ஏ.ஆர்.அன்சாரியை சந்தித்து,  ஜவகர் அறிவியல் கல்லூரியை தொடர்ந்து நடத்துவது தொடர்பாக முறையிட்டுள்ளார். அப்போது என்.எல்.சி. நிறுவனம் நவரத்னா தகுதி பெற்றதற்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன்,  ஜவகர் அறிவியல் கல்லூரியை தொடர்ந்து நடத்தவேண்டும் என்றும், பேராசிரியர்களின் சம்பளம் தொடர்பாக மத்திய அரசு மூலமாக பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு பரிந்துரை செய்து, அவர்களின்  ஊதியத்துக்கான மானியம் பெற்றுத்தர பரிந்துரை செய்கிறேன்.

             நீங்களும் மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம் மூலம் நடவடிக்கை எடுத்து நெய்வேலியைச் சுற்றிவாழும் மாணவ,மாணவியர் பாதிக்கப்படாவண்ணம் கல்லூரி தொடர்ந்து இயக்கவேண்டும் என்று கோரியுள்ளார். இதை ஏற்றுக்கொண்ட என்.எல்.சி. தலைவர் ஏ.ஆர்.அன்சாரி கல்லூரி தொடர்ந்து இயங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று கூறியதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்திருந்தார்.

              இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் சனிக்கிழமை முதல் 2011-2012-ம் ஆண்டு புதிய இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப்ப டிப்புக்கான விண்ணப்பத்தை விநியோகிக்க தொடங்கியுது. சனிக்கிழமை சுமார் 50 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்லூரியின் பொறுப்பு முதல்வர் வி.டி.சந்திரசேகர் தெரிவித்தார்.  



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior