குறிஞ்சிப்பாடி :
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய தருமசாலை 145 ஆம் ஆண்டு தொடக்க விழா நடந்தது.
வடலூரில் வள்ளலார் 1867 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 11ம் நாள் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமசாலை தொடங்கி, பசி என வருவோருக்கு அன்னதானம் வழங்கும் வழக்கத்தை தொடங்கி வைத்தார். அன்று முதல் இன்று வரை அவர் தொடங்கி வைத்த அடுப்பு அணையாமல் பல ஆண்டுகளாக அன்னதானம் வழங்ப்பட்டு வருகிறது. வள்ளலார் தொடங்கி சத்திய தருமசாலை 145ஆம் ஆண்டு தொடக்க விழா நேற்று நடந்தது.
விழாவை முன்னிட்டு கடந்த 15ம் தேதி முதல் தருமசாலை மேடையில் மகாமந்திரம், அகண்ட பாராயணம் ஒதுதல், ஞானசபையில் திருஅருட்பா முற்றோதல் நடந்தது. நேற்று முன்தினம் மழையூர் சதாசிவம் திருஅருட்பா இசை நிகழ்ச்சியும், இளைஞர் மன்றம் சார்பில் மனுநீதி நாடகம் நடந்தது. ஆண்டு விழாவான நேற்று காலை 5 மணிக்கு அகவற் பாராயணம் ஒதுதல், 7.30 மணிக்கு தருமசாலையில் சன்மார்க்க கொடி உயர்த்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை பாண்டுரங்கன், கருங்குழி கிஷோர்குமார் குழுவினரின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும், பார்வதிபுரம் கிராம வாசிகளின் சன்மார்க்க சொற்பொழிவும் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார், அறங்காவலர் குழு தலைவர் ராமலிங்கம் செய்திருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக