கடலூர் :
கடலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை அந்தந்த பகுதிகளில் நடைபெறும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கலெக்டர் அமுதவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கடலூர் மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களான கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு அரசு பெரியார் கலைக் கல்லூரி, அண்ணாகிராமம் கோழிப்பாக்கம் அரசு பள்ளி, பண்ருட்டி அங்குசெட்டிப்பாளையம் அன்னை வேளாங்கண்ணி பாலிடெக்னிக், குறிஞ்சிப்பாடி எஸ்.கே.வி., மெட்ரிக் பள்ளி, காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, குமராட்சி, சிதம்பரம் நந்தனார் அரசு ஆண்கள் பள்ளியிலும் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.
கீரப்பாளையம், சிதம்பரம் ரயிலடி அரசு பெண்கள் பள்ளி, மேல்புவனகிரி சிதம்பரம் நந்தனார் அரசு பெண்கள் பள்ளி, விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், கம்மாபுரம் என்.எல்.சி., ஆண்கள் பள்ளி, நல்லூர் பெண்ணாடம் அரசு ஆண்கள் பள்ளி, மங்களூர் திட்டக்குடி அரசு ஆண்கள் பள்ளி ஆகிய 13 இடங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். கடலூர் நகராட்சிக்கு கடலூர் டவுன் ஹால், நெல்லிக்குப்பம் டேனிஷ் மேல்நிலைப்பள்ளி, பண்ருட்டி, ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், விருத்தாசலம், கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி, சிதம்பரம் ராமசாமி செட்டியார் மேல்நிலைப் பள்ளி ஆகிய 5 இடங்களில் நகராட்சிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.
பேரூராட்சிகளான அண்ணாமலைநகர் திருவேட்களம் ராணி சீதை ஆச்சி பள்ளி, புவனகிரி மற்றும் பரங்கிப்பேட்டைக்கு புவனகிரி அரசு ஆண்கள் பள்ளி, கெங்கைகொண்டான், மங்கலம்பேட்டைக்கு மங்கலம்பேட்டை பள்ளி, காட்டுமன்னார்கோவில், லால்பேட்டைக்கு காட்டுமன்னார்கோவில் பருவதராஜகுலம் குருகுல மேல்நிலைப் பள்ளி, கிள்ளைக்கு அரசு மேல்நிலைப் பள்ளி, குறிஞ்சிப்பாடி, வடலூருக்கு வள்ளலார் குருகுல மேல்நிலைப் பள்ளி, மேல்பட்டாம்பாக்கம் மற்றும் தொரப்பாடிக்கு புதுப்பேட்டை தொரப்பாடி பேரூர் அரசு பள்ளி, பெண்ணாடம், திட்டக்குடிக்கு திட்டக்குடி அரசு பள்ளி, சேத்தியாதோப்பு, ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சிகளுக்கு சேத்தியாதோப்பு டி.ஜி.எம்., மேல்நிலைபள்ளி ஆகிய 16 பேரூராட்சிகளுக்கு 9 இடங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.
இவ்வாறு கலெக்டர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.