மாணவர்கள் நிரந்தர சாதிச் சான்றிதழ் கோரி வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி வேண்டுகோள் விடுத்து உள்ளார். அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் பயிலும் மாணவ மாணவியர் சாதிச் சான்றிதழ்களை, தங்கள் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் இதுவரை சுமார் 10 ஆயிரம் மாணவ, மாணவியர் நிரந்தரச் சாதிச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. எனவே சாதிச் சான்றிதழுக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் 30-11-2009-க்குள் அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுóக் கொள்ளப்படுகிறார்கள் என்று செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக