உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, நவம்பர் 27, 2009

ஆட்​சி​யர் அறி​வுரை

​ கட​லூர்,​ நவ. 26:​

மீன​வர்​கள் வாக்​கா​ளர் அடை​யாள அட்​டை​க​ளு​டன் மீன்​பி​டிக்​கச் செல்​லு​மாறு,​ கட​லூர் மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் வியா​ழக்​கி​ழமை அறி​வுரை வழங்​கி​னார்.

24-ம் தேதி கட​லூர் தாழங்​குடா மீன​வர்​கள் 100 பேர் வங்​கக் கட​லில் வழக்​க​மான இடத்​தில் மீன்​பி​டித்​துக் கொண்டு இருந்​த​போது இந்​தி​யக் கடற்​ப​டை​யி​ன​ரால் தாக்​கப்​பட்​ட​னர். இத​னால் மீனவ மக்​க​ளி​டையே கொந்​த​ழிப்பு ஏற்​பட்​டது. எனவே வியா​ழக்​கி​ழமை மாலை மீன​வர் அமைப்​பு​க​ளின் பிர​தி​நி​தி​களை அழைத்து மாவட்ட ஆட்​சி​யர் பேசி​னார். பின்​னர் அவர் செய்​தி​யா​ளர்​க​ளி​டம் கூறி​யது:​ ​÷க​டற்​படையினர் மீன​வர்​க​ளைத் தாக்​கக்​கூ​டாது என்று மீன​வர்​கள் கேட்​டுக் கொண்​ட​னர். சந்​தே​கப்​பட்​டால் மீன​வர்​க​ளைப் பிடித்து,​ கட​லூர் காவல் துறை​யி​ன​ரி​டம் ஒப்​ப​டைக்​க​லாம் என்​றும் கூறி​னர். கடற்​ப​டை​யி​ன​ரி​டம் இருந்து தங்​க​ளுக்​குப் பாது​காப்பு வேண்​டும் என்​றும் கோரி​னர்.÷இந்​திய இறை​யாண்​மைக்கு அச்​சு​றுத்​தல் ஏற்​பட்டு இருப்​ப​தா​லேயே நாட்டு நலன் கருதி கடற்​ப​டை​யி​னர் ரோந்​துப் பணி​யில் ஈடு​பட்டு இருக்​கி​றார்​கள் என்று மீன​வர்​க​ளி​டம் எடுத்​துக் கூறப்​பட்​டது. அவர்​க​ளும் ஏற்​றுக் கொண்​ட​னர். அனைத்து மீன​வர்​க​ளுக்​கும் விரை​வில் அடை​யாள அட்டை வழங்க மீன்​வ​ளத் துறைக்கு உத்​த​ர​வி​டப்​பட்டு இருக்​கி​றது.÷மீ​ன​வர் அடை​யாள அட்டை வழங்​கும் வரை,​ வாக்​கா​ளர் அடை​யாள அட்​டை​களை மீன​வர்​கள் எடுத்​துச் செல்​லு​மாறு அறி​வு​றுத்​தப்​பட்டு இருக்​கி​றது. மீன​வர்​கள் அச்​ச​மின்றி மீன் பிடிக்​கச் செல்​ல​லாம் என்​றார் ஆட்​சி​யர்.÷கூட் ​டத்​தில் சட்​டப் பேரவை உறுப்​பி​னர் கோ.அய்​யப்​பன்,​ கட​லூர் நக​ராட்​சித் தலை​வர் து.தங்​க​ராசு,​ மாவட்ட வரு​வாய் அலு​வ​லர் எஸ்.நட​ரா​ஜன்,​ மீன் வளத்​துறை உதவி இயக்​கு​நர் அறி​வு​மதி,​ மீன​வர் அமைப்​பு​க​ளின் பிர​தி​நி​தி​கள் சுப்​பு​ரா​யன்,​ ஏகாம்​ப​ரம்,​ குப்​பு​ராஜ் உள்​ளிட்ட பலர் கலந்​து​கொண்​ட​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior