உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, நவம்பர் 27, 2009

இருந்தும் பயனில்லாத சிக்னல்: வாகன ஓட்டிகள் அவதி

பண்ருட்டி, நவ. 26:

பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் இரு சிக்னல்கள் இருந்தும், ஒன்று கூட எரியாததால் கடந்த இரு நாள்களாக வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும், போக்குவரத்து போலீஸரும் அவதி அடைந்துள்ளனர்.

பண்ருட்டிக்கு வியாபாரம் மற்றும் பணி நிமித்தமாக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். மேலும் நகரின் மையப் பகுதியான காந்திசாலை, ராஜாஜி சாலை, சென்னை-கும்பகோணம் சாலை மற்றும் கடலூர் சாலையில் மளிகை, பாத்திரம், தங்க நகை உள்ளிட்ட பல வியாபார நிறுவனங்கள் அமைந்துள்ளதால், நான்கு முனை சந்திப்பு எப்போதும் மக்கள் கூட்டம் அதிகரித்து பரபரப்பாக காணப்படும்.÷மேலும் சென்னை-கும்பகோணம், கடலூர்-சித்தூர் நெடுஞ்சாலைகள் நான்கு முனை சந்திப்பில் சந்திக்கின்றன. இதனால் இச்சாலையில் வரும் வாகனங்கள் நான்கு முனை சந்திப்பைக் கடந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படும்.÷இத்தகைய போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த நான்கு முனை சந்திப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பொறுத்தப்பட்ட சிக்னல் பயன்பாட்டில் இருந்து வந்தது. பின்னர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு புதிதாக ஒரு சிக்னல் பொருத்தப்பட்டு அது பயன்பாட்டுக்கு வந்தது. இதனால் பழைய சிக்னல் பராமரிப்பின்றி கை விடப்பட்டது.

இந்நிலையில் புதிய சிக்னல் இம்மாதம் 18-ம் தேதி திடீர் என செயல்படாமல் போனது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதன் பின்னர் சரி செய்யப்பட்ட புதிய சிக்னல் கடந்த இரு நாள்களாக மீண்டும் எரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் பாதிக்கப்பட்டனர். போக்குவரத்து போலீஸôர் வாகனங்களை முறைப்படுத்தி அனுப்ப படாத பாடுபடுகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior