கடலூர் மீனவர்களை இந்தியக் கடற்படை தாக்கியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது.
அக்கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலில் மீன்பிடிக்கச் சென்ற தாழங்குடா மீனவர்கள் 50க்கும் மேற்பட்டவர்களை இந்திய கடற்படையினர் தாக்கி உள்ளனர். மீன்களையும் வலைகளையும் விட்டுவிட்டு தப்பிப் பிழைத்துக் கரை சேர்ந்து உள்ளனர். இத் தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மத்திய அரசு உடனே தலையிட்டு மீனவர்களின் வாழ்வாதாரங்களையும், உரிமைகளையும், பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ÷மத்திய அரசு கொண்டுவர இருக்கும் கடல் மீன் தொழில் ஒழுங்குமுறைச் சட்டத்தில் மீனவர்களின் உரிமைகளைக் கடுமையாகப் பாதிக்கும் பல்வேறு சரத்துகள் இடம்பெற்று உள்ளன. இச்சட்டம் நடைமுறைக்கு வரும் முன்பே கடலோரக் காவல் படையினர் அத்துமீறி முறையான விசாரணையின்றி, மீனவர்களைத் தாக்கி இருப்பது வேதனை அளிக்கிறது.
கடல் வளத்தையும், மீனவ மக்களின் உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் கடல் மீன் தொழில் ஒழுங்குமுறைச் சட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுக்க அனைத்துப் பகுதி மக்களும் அணி திரள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக