குடும்ப வன்முறை தொடர்பான வழக்குகளில், விரைவில் தீர்வு காண வேண்டும் என்று கடலூரில் நடந்த பெண்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு மாநாட்டில் கோரிக்கை விடப்பட்டது.÷
அனைத் திந்திய ஜனநாய மாதர் சங்கம் சார்பில் இந்த மாநாடு கடலூரில் புதன்கிழமை நடந்தது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:÷
கு டும்ப வன்முறை சட்டம் 2005-ல் அமலுக்கு வந்தது. 2007 முதல் இதுவரை தொடரப்பட்ட வழக்குகளில் இன்னமும் தீர்வு காணப்படவில்லை. எனவே குடும்ப வன்முறை தொடர்பான வழக்குகளில் விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருத்தாசலம் வட்டம் ஆவட்டியில் இளம் பெண் கலைச்செல்வி, குடும்ப வன்முறையால் எரித்துக் கொல்லப்பட்டார். இதுவரை குற்றவாளி கைது செய்யப்படாதது கணடிக்கத் தக்கது. விரைவில் குற்றவாளியைக் கைது செய்ய வேண்டும். கடலூர் மாவட்டத்தில் சிறுமியர் மீதான பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இதுகுறித்து போலீஸôர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுவர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கோரும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.÷மா நாட்டுக்கு அனைத்திந்திய ஜனநாய மாதர் சங்க கடலூர் மாவட்டச் செயலாளர் வி.மேரி தலைமை தாங்கினார்., மாவட்ட நிர்வாகிகள் எம்.மனோரஞ்சிதம், பி.சிவகாமி, எஸ்.லட்சுமி எஸ்.சந்திரா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட ஊராட்சித் தலைவி இரா.சிலம்புச்செல்வி தொடங்கி வைத்துப் பேசினார். குடும்ப வன்முறை தொடர்பான வழக்குகளைத் தொகுத்து மாவட்டத் தலைவர் எஸ்.வாலண்டீனா பேசினார். மாநிலச் செயலாளர் ஜோதிலட்சுமி, சக்கி குடும்ப நல ஆலோசனை மைய நிர்வாகி கோடீஸ்வரன், சிதம்பரம் நகராட்சித் தலைவர் பெüஜியாபேகம், கோண்டூர் ஊராட்சி மன்றத் தலைவர் சுஜாதா ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் பேசினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக