உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 21, 2009

குற்​றங்​க​ளைத் தடுக்க போலீஸ் நட​வ​டிக்கை கட​லூ​ரில் கண்​கா​ணிப்​புக் கேமராக்​களை நிறுவ திட்​டம்

கட​லூர்,​​  டிச.​ 19:​ 

                           குற்​றங்​க​ளைத் தடுக்க கட​லூ​ரில் முக்​கிய இடங்​க​ளில் கண்​கா​ணிப்​புக் கேமராக்​க​ளைப் பொறுத்த திட்​ட​மிட்டு இருப்​ப​தாக கட​லூர் போலீஸ் துணைக் கண்​கா​ணிப்​பா​ளர் ஸ்டா​லின் தெரி​வித்​தார்.​

                          குற் ​றங்​க​ளைத் தடுக்க எத்​த​கைய நடவ​டிக்​கை​களை மேற்​கொள்ள வேண்​டும் என்​பது குறித்து கட​லூர் நகர வணி​கர்​க​ளு​டன் காவல்​துறை ஆலோ​ச​னைக் கூட்​டம் சனிக்​கி​ழமை நடந்​தது.​÷கூட்​டத்​தில் துணைக் கண்​கா​ணிப்​பா​ளர் ஸ்டா​லின் கூறி​யது:​ ​

                       தங்க நகை​க​ளின் விலை​கள் பெரு​ம​ள​வுக்கு உயர்ந்து விட்​டன.​ எனவே நகை​க​ளைப் பாது​காப்​ப​தில் கூடு​தல் கவ​னம் தேவை.​ மார்​கழி மாதம் தொடங்​கி​விட்​டால் அதி​கா​லை​யிலே எழுந்து பெண்​கள் கோலம் போடு​வது வழக்​கம்.​ எனவே அத்​த​கைய பெண்​கள் தங்​கள் அணி​க​லன்​கள் குறித்து பாது​காப்​பு​ட​னும் கவ​னத்​து​ட​னும் இருக்க வேண்​டும்.​ ​

                                     2011-ம் ஆண்டு வரை மக்​கள் தொகை கணக்​கெ​டுப்​புப் பணி​கள் நடக்​கி​றது.​ எனவே கூடு​தல் போலீஸ் நிலை​யங்​கள் அமைப்​பது குறித்து 2011 வரை முடிவு எடுக்க முடி​யாது.​ காவல்​துறை மூலம் தொடர்ந்து வாகன சோத​னை​கள் நடத்​தப்​ப​டு​கின்​றன.​ பொது​மக்​கள் ஒத்​து​ழைப்பு நல்க வேண்​டும்.​ ​
                   
                        நக​ரில் பொது​மக்​கள் அதி​கம் கூடும் இடங்​க​ளில் கண்​கா​ணிப்​புக் கேமராக்​களை நிறுவ திட்​ட​மி​டப்​பட்டு உள்​ளது.​ இதற்​குக் கூடு​தல் செலவு பிடிக்​கும்.​ எனவே பொது​மக்​கள் பங்​க​ளிப்​பு​டன் இத்​திட்​டத்தை நிறை​வேற்ற ஆலோ​சனை நடத்தி வரு​கி​றோம்.​   குற்​றங்​க​ளைத் தடுக்க பொது​மக்​க​ளும் வணி​கர்​க​ளும் போலீ​ஸô​ருக்கு ஒத்​து​ழைப்பு அளிக்க வேண்​டும் என்​றார் ஸ்டா​லின்.​

                   வணி​கர்​கள் தரப்​பில் பேசி​ய​வர்​கள்,​​ "போலீ​ஸôர் திற​மை​யா​கச் செயல்​பட்டு வரு​கி​றார்​கள்​. குற்​றங்​கள் அதி​க​ரித்து வரு​கி​றது.​ காவல் நிலை​யங்​க​ளில் கூடு​த​லா​கக் காவ​லர்​களை நிய​மிக்க வேணும்.​ கட​லூர் கூத்​தப்​பாக்​கத்​தில் புதி​தா​கக் காவல் நிலை​யம் அமைக்க வேண்​டும்' என்​றும் கோரி​னர்.​ ​

                 கூட்​டத்​தில் வணி​கர்​கள் தரப்​பில் ஹோட்​டல் உரி​மை​யா​ளர்​கள் சங்க நிர்​வா​கி​கள் ஜனார்த்​த​னம்,​​ வெங்​க​ட​சுப்பு,​​ நகைக்​கடை உரி​மை​ய​ôளர்​கள் பாலு,​​ ராஜ​கோ​பால் உள்​ளிட்​டோர் பேசி​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior