உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 18, 2010

செம்மொழி மாநாட்டிற்கு செல்லும் போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை

கடலூர் : 

                 கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள கடலூர் மாவட்ட போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

                    கோவையில் வரும் 23 முதல் 27ம் தேதி வரை உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடக்கிறது. இதற்காக அனைத்து மாவட்டத்தில் உள்ள போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கடலூர் மாவட்டத்திலிருந்து எஸ்.பி., தலைமையில், ஏ.டி.எஸ்.பி., டி.எஸ். பி.,க்கள், இன்ஸ்பெக்டர் கள், சப் இன்ஸ்பெக்டர் கள், போலீசார் உட்பட 770 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள் அனைவரும் வரும் 19ம் தேதி இரவு கடலூரிலிருந்து புறப்படுகின்றனர்.

                   கோவை மாநாட்டில் பல லட்சம் பேர் கூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. உலக தலைவர்கள் பங்கேற்க உள்ளதால், மாநாட்டில் எந்தவித தொற்று நோய் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

                      கடலூர் மாவட்டத்திலிருந்து கோவைக்கு செல்லும் போலீசாரின் உடல் திறன் குறித்து மருத்துவப் பரிசோதனை செய்ய எஸ்.பி., உத்தரவிட்டார். கடலூர் அரசு மருத்துமனையில் டாக்டர் பாண்டியன் தலைமையிலான மருத்துவர்கள் நேற்று பரிசோதனை செய்தனர். பின்னர் நிலைய மருத்துவர் கோவிந் தராஜ் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior