உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 18, 2010

எம்.பி.பி.எஸ். மாற்றுத் திறனாளிகளுக்கு ரேங்க் பட்டியல் வெளியீடு

                  எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கையில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோருக்கான ரேங்க் பட்டியல் வியாழக்கிழமை (ஜூன் 17) வெளியிடப்பட்டது.  

                 எம்.பி.பி.எஸ். மொத்த இடங்களில் 3 சதவீத இடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும். அதாவது, மொத்தம் 42 எம்.பி.பி.எஸ். இடங்கள் ஒதுக்கப்படும். ஒவ்வொரு அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள மொத்த இடத்தில் 3 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும்.  மாற்றுத் திறனாளிகள் பிரிவில் மொத்தம் 78 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 51 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, ரேங்க் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். கட்-ஆஃப் மதிப்பெண் 193.5-ல் தொடங்கி, 105.50 வரை பெற்றுள்ள மாணவர்கள் ரேங்க் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.  

                இவர்களில் 24 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்; 3 பேர் பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பைச் சேர்ந்தவர்கள்; 12 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்; 9 பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்; 3 பேர் தாழ்த்தப்பட்ட (அருந்ததியர்) வகுப்பைச் சேர்ந்தவர்கள். எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய பிளஸ் 2 தேர்வு தகுதி மதிப்பெண் இல்லாததால், ரேங்க் பட்டியலில் இடம்பெற்றுள்ள இரண்டு பேருக்கு "பி.டி.எஸ். ஒன்லி' (பல் மருத்துவப் படிப்பு மட்டும்) என்ற குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாணவர்களுக்கும் ஜூலை 3-வது வாரம் நடைபெறும் பி.டி.எஸ். கவுன்சலிங்கின்போது அழைப்பு அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும் என்றார் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி.

               முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகளுக்கு... எம்.பி.பி.எஸ். படிப்பில் முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகளுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. பி.டி.எஸ். படிப்பில் ஒரு இடம் ஒதுக்கப்படும். இரண்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு 238 மாணவர்கள் அடங்கிய ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கட்-ஆஃப் மதிப்பெண் 196.50-ல் தொடங்கி, 99.50 வரை உள்ள மாணவர்கள் ரேங்க் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 

இணையதளத்தில்...:  

                 மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கான ரேங்க் பட்டியல் சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org மற்றும் தமிழக அரசின் இணையதளம் www.tn.gov.in ஆகியவற்றில் வெளியிடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior