பி.இ. படிப்புகளுக்கான ரேங்க் பட்டியலை உயர் கல்வி அமைச்சர் க. பொன்முடி வெள்ளிக்கிழமை (ஜூன் 18) வெளியிடுகிறார்.
இதன் விவரம் www.annauniv.edu என்ற இணையதளத்திலும் வெளியிடப்படும். அண்ணா பல்கலைக்கழகங்கள், அவற்றின் உறுப்பு கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் (அரசு ஒதுக்கீடு) ஆகியவற்றில் 2010-11-ம் ஆண்டில் பி.இ. படிப்புகளில் சேருவதற்கு 1.67 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ரேங்க் பட்டியலை உயர்கல்வி அமைச்சர் க.பொன்முடி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடுகிறார். உயர்கல்வி முதன்மைச் செயலர் க.கணேசன், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் குமார் ஜெயந்த், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் உள்ளிட்டோர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். இத் தகவலை பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரிரயாஜ் கூறினார். பி.இ. கலந்தாய்வு வரும் 28-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக