உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 18, 2010

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்லூரிகளில் தனிக் கட்டணம் ரத்து: முதல்வர் கருணாநிதி


              மாற்றுத் திறனாளி மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி நிறுவனங்களில் தனிக் கட்டணத்தை ரத்து செய்து முதல்வர் கருணாநிதி வியாழக்கிழமை உத்தரவிட்டார்.  
 
இதுகுறித்து அவரது உத்தரவு: 
 
                "மாற்றுத் திறனாளிகள் உயர்கல்வி பயிலுவதற்கு ஏதுவாக அவர்கள் கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. வரும் கல்வி ஆண்டிலிருந்து தனிக் கட்டணம் செலுத்துவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.  மேலும், மாநில அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகளை அவர்கள் பெற்றிட வருவாய் உச்சவரம்பு முற்றிலும் நீக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புகளைச் செயல்படுத்தும் வகையிலான உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.  அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பல்கலைக்கழகங்கள், மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், வேளாண் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகியவற்றில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்பு வகுப்புகளில் பயிலும் அனைத்து வகை மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தனிக் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது.   
 
                நலத் திட்ட உதவிகளைப் பெறும் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள வருவாய் உச்சவரம்பு முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. இந்த உத்தரவு காரணமாக, ஆண்டுக்கு ரூ.7.71 கோடி கூடுதல் செலவு ஏற்படும். மொத்தம் 22 ஆயிரத்து 685 மாற்றுத் திறனாளிகள் பயன் பெறுவர்' என்று முதல்வர் கருணாநிதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். எத்தனை வகையான சலுகைகள்? மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசு 48 வகையான நலத் திட்ட உதவிகளை அளிக்கிறது. அவர்களுக்கு கல்வியில் 3 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. மாற்றுத் திறனாளிகள் மரணம் அடைந்தால் ரூ. 1 லட்சம் வரை நிவாரண நிதி, அவர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித் தொகை, வேலை தேடும் மாற்றுத் திறனாளிகளுக்கு நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்கள் அரசின் சார்பில் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.  

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior