சிதம்பரம் :
கல்வி என்பது மக்களின் நல் வாழ்க்கை மட்டுமல்லாமல் எதிர்கால முதலீடாக கருதப்படுகிறது என கல்வியியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பத்மநாபன் பேசினார்.
சிதம்பரம் காமராஜ் கல்வியியல் கல்லூரியில் படித்த 95 மாணவிகள் உட்பட 187 மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. காமராஜ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் லட்சுமிகாந்தன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் சாராசாந்தகுமாரி வில்லியம்ஸ் ஆண்டறிக்கை வாசித்தார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் பத்மநாபன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவிகளுக்கு பட்டங்களையும், பரிசுகளையும் வழங்கினார்.
பின்னர் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் பத்மநாபன் பேசியதாவது:
கல்வி என்பது தற்போது மக்களின் நல்வாழ்க்கை மட்டுமல் லாமல் எதிர்கால மற்றும் நிகழ் காலத்திற்கான முதலீடாக கருதப்படுகிறது. கல்வி நிறுவனத் தின் சிறப்புகள், சுய மதிப்பீடுகள் மற்றும் சுய வளர்ச்சிக்கு வித்திடுவதாக தேசியக் கல்விக்குழு(1986) கூறுகிறது. ஆசிரியர் கல்வி உட்பட எல்லா கல்வி முறைகளும் முக்கியமாக கல்வியின் தரத்தையும், பலன்களையும் பொறுத்து வளர்ச்சி அடைகிறது.
உயர் கல்வியானது சமூகத் தில் உள்ளவர்களுக்கு அறிவுத் தேடல், சுயஆக்கத்திறன்,செய்திகளை மேம்படுத்துதல் போன்ற வாய்ப்புகளை வழங்குவதில் பொறுப்பேற்று செயல்பட வேண்டும். உயர்கல்வி என்பது ஒரு வளமிக்க நிலம்போல் தன்னை தயார்படுத்தி, புதிய வடிவிலான எண்ணங் களையும்,தொழில் நுட்பங்களையும் பெற்று சிறந்து விளங்க வேண் டும். உயர் கல்வியில் முதலீடு என்பது எதிர்காலத்தின் முதலீடாகும்.
நாம் எந்த தொழில் செய்தாலும் உலக தரத்திற்கேற்ற வகையில் நவீனப்படுத்த வேண்டும். இந்தியா பொருளாதார புரட் சிக்கு சான்றாக திகழ்கிறது. பொருளாதார வளர்ச்சிக்கு விண் வெளியும், அதனை சார்ந்த துறையும் பெரும் பங்கு வகிக்கிறது. அதனால் தான் 2020ல் இந் தியா வல்லரசாகும் என முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் நினைவு கூர்ந்துள்ளார். நகர் புற மேம்பாட்டினை மையமாக கொண்ட சுகாதார மையங்கள் இயங்குகின்றன. இந்த நிலை மாறி கிராமப்புற மக்களையும் சென்றடைய வேண்டும். கல்வியியல் தேவைகளில் அதிக பரிமானங்களைப் புகுத்த வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. புத்தகத்தில் உள்ளதை படித்து அப்படியே அர்த்தம் கூறாமல் மாணவர்களின் உள் வளர்த்திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் பி.ஆர்.ஓ., செல்வம், தாளாளர் வீனஸ் குமார், காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் மீனாட்சி, சக்தி, நிர்வாக அலுவலர் சந்திரசேகரன்,பாலசுப்ரமணியன், பொறியாளர் குமரேசன் தலைமை ஆசிரியர் பிச்சமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக