உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 18, 2010

வாடகைக்கு எடுத்து விற்கப்பட்ட கார்கள் உரியவரிடம் ஒப்படைப்பு

கடலூர் : 

                   கடலூரில் வாடகைக்கு எடுத் துச் சென்று விற்பனை செய்யப் பட்ட 14 கார்களை மீட்டு அதன் உரிமையாளர்களிடம் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் ஒப்படைத்தார்.

                    திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளாறு கிராமத்தைச் சேர்ந்தவர் அரசு பஸ் டிரைவர் ரவி. இவர் தனியார் மொபைல் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் மாத வாடகைக்கு கார் வேண்டுமென கடலூர் மாவட்ட கார் டிரைவர்களை அனுகினார். கடலூர் புதுநகர், திருப்பாதிரிபுலியூர், குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி மற்றும் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் 17 கார்களை வாடகைக்கு ரவியிடம் விட்டிருந்தனர். ஆனால் ரவி கூறியபடி வாடகையும் தர வில்லை, கார்களையும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கவில்லை .இந்நிலையில் ரவி 31ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். கார்களை மீட்டுத்தரக்கோரி கார் உரிமையாளர்கள் எஸ்.பி., யிடம் கடந்த 1ம் தேதி புகார் மனு கொடுத்தனர்.

                     எஸ்.பி., உத்தரவின் பேரில் மாவட்ட குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் மாயமான கார்கள் மாயிலாடுதுறை, திருநெல்வேலி, சென்னை உட்பட பல இடங்களில் இயங்குவதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் 14 கார்களை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட வாகனங்களை நேற்று கடலூர் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் பார்வையிட்டு கார் உரிமையாளர்களிடம் அதன் சாவியை வழங்கினார்.

பின்னர் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கூறியதாவது:

                    கார் மாயமான சம்பவம் குறித்த புகாரின் பேரில் எடுக்கப்பட்ட நடடிக்கையில் 14 கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 கார்கள் விரைவில் பறிமுதல் செய்யப்படும். இது தொடர்பாக திருப்பூரைச் சேர்ந்த செல்வம் தேடப்பட்டு வருகிறார். மாவட்டத்தில் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது திருட்டு சம்பவம் குறைவாகத்தான் நடந்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக நடக்கும் தொடர் திருட்டு சம்பவத்தை தடுக்க மாவட்டத்தில் 4 டி.எஸ்.பி.,கள் நைட் ரவுண்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருட்டை தடுக்க பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். நகைகடைகளில் கேமரா, அலாரம் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும்.இவ்வாறு எஸ்.பி., கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior