உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 30, 2010

சிதம்பரம் ரயில் நிலையம் கலை அம்சங்களுடன்முன்மாதிரியாக அமைக்கப்படுகிறது: வைத்திலிங்கம்

சிதம்பரம்:

               சிதம்பரம் ரயில் நிலையம் கோவில் கலை அம்சங்களுடன் முன் மாதிரியாக அமைக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் மாத இறுதியில் பயன்பாட்டிற்கு விடப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் கூறினார். மயிலாடுதுறை- விழுப்புரம் வரை உள்ள ரயில் நிலையங்கள் புதுப்பிக்கும் பணியை பார்வையிட திருச்சிக் கோட்ட மேலாளர் வைத்தி யலிங்கம், முத்துராமலிங்கம், முருகராஜ், ராஜ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று வருகை தந்தனர்.

                வழியில் உள்ள சிதம்பரம் ரயில் நிலையத்தை ஆய்வுசெய்தனர். பயணிகள் காத்திருக்கும் அறையில் உள்ள மின் விளக்குகளை மாற்றி அமைக்கவும், ரயில் நிலைய நுழைவு வாயிலில் இருந்து பஸ் நிலையம் செல்லும் சாலை வரை மரக் கன்றுகளை தவிர மற்ற ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், ரயில் நிலையம் நுழைவு வாயில் அருகில் உள்ள விநாயகர்கோவில் அருகில் ரயில்வே ஊழியர்கள் கட்டி வரும் புதிய கோவிலை அகற்றுமாறு ஊழியர்களிடம் உத்தரவிட்டார்.

             அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள் கூட்டமைப்பு செயலாளர் விஜயகுமார், ரயில் பயணம் செய்வோர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் தனசேகர் மாணவர்கள் பயன் பெறும் வகையில் ரயில் நேரத்தை மாற்றி அமைக்க வேண் டும் என கோரிக்கை வைத்தனர். 

பின்னர் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் வைத்தியலிங்கம்  கூறுகையில், 

                சிதம்பரம் ரயில் நிலையம் முழுவதும் புதுமைப் படுத்தி முன்மாதிரி நிலையமாக கோவில் கலை அம்சங்களுடன் சிறப்பாக அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிந்து ஆகஸ்ட் மாதம் இறுதியில் நடை முறைக்கு விடப்படும், பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப ரயில் நேரத்தை மாற்ற தலைமையிடத்திற்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். ரயில் நிலையத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் விரிவுபடுத்தப்படும். புதிய கட்டங்ள் கட்டி முடிந்ததும் பழைய கட்டங்கள் அனைத்தும் இடிக்கப்படும் என்றார். அப்போது ரயில்வே அதிகாரிகள் செல்வராஜ், வேலுசாமி, கனகராஜ் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior