கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படும் காஸ் சிலிண்டர்களின் எடை குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து தொழிலாளர் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை தொழிலாளர் ஆணையர் மற்றும் முதன்மைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் உத்தரவின் பேரில் எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி ரவிச்சந்திரன் மேற்பார்வையில், கடலூர் சட்ட முறை எடையளவு துணை கட்டுப்பாட்டு அதிகாரி கமலக்கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் காஸ் நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு வினியோகம் செய்ய எடுத்துச் செல்லும் போது ஆய்வு செய்தனர்.
இதில் வீடுகளுக்கு எடுத்து செல்லும் காஸ் சிலிண் டர்களை எடை வைத்து பார்த்ததில் அளவு குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் விருத்தாசலத்தில் இரண்டு காஸ் நிறுவனங்கள் மீதும், சிதம்பரத்தில் ஒரு நிறுவனம் மீதும், கடலூரில் மூன்று நிறுவனங்கள் மீதும் எடையளவு சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நுகர்வோர்கள் தாங்கள் பெறும் காஸ் சிலிண்டர்களை, சிலிண்டர் கொடுக்க வரும் பணியாளர்களிடம் உள்ள தராசின் மூலம் எடை அளவை சரி பார்த்து வாங்க வேண்டும்.
எடை குறைவாக இருந்தால்,
எடையளவு துணை கட்டுப்பாட்டு அதிகாரி,
எண் 60, சுப்புராயலு நகர்,
2வது குறுக்கு தெரு,
கடலூர்.
போன் 223984
என்ற முகவரியில் தெரிவிக்கலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக