உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 30, 2010

ரயில்வே மண்டல மேலாளர் ஆய்வு:கடலூரில் திடீர் மறியலால் பரபரப்பு

கடலூர்:

                அகல ரயில் பாதை பணிகளை திருச்சி மண்டல மேலாளர் ஆய்வு மேற்கொண்டிருந்த போது, பொது நல சங்கத்தினர் தண்டவாளத்தில் படுத்து மறியலில் ஈடுபட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை சென்ற பாசஞ்சர் ரயில் நேற்று முன்தினம் காலை திருப்பாதிரிப்புலியூர் இரண்டாவது பிளாட்பாரத்தை கடந்த போது சிமென்ட் சிலாப்பில் உரசி பெட்டிகள் சேதமடைந்தன. விழுப்புரம்-மயிலாடுதுறை அகல ரயில் பாதை பணிகளை ரயில்வே திருச்சி மண்டல மேலாளர் வைத்தியலிங்கம் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இக்குழுவினர் வந்த ரயில் கடலூர் ரயில் நிலையத்திற்கு நேற்று மதியம் 3.05 மணிக்கு வந்தது.

                     கடலூர் அனைத்து பொதுநல இயக்கத்தினர் மனு கொடுப்பதற்காக நின்றிருந்தனர். அப்போது அவ்வியக்கத்தைச் சேர்ந்த துரைவேலு என்பவர் தண்டவாளத்தில் திடீரென படுத்து மறியலில் ஈடுபட்டார். கூட்டத்தினர் கூச்சலிடவே இன்ஜின் டிரைவர் பிரேக் போட்டு ரயிலை நிறுத்தியதால் உயிர் தப்பினார். ரயில்வே போலீசார் அவரை அப்புறப்படுத்தினர். லாரன்ஸ் ரோட்டில் சுரங்கப்பாதை, திருப்பாதிரிப்புலியூரில் ரயில் நிறுத்தம் வேண்டும் என பொது நல இயக்கத்தினர் மண்டல மேலாளரிடம் கோரிக்கை வைத்தனர். நகராட்சி சேர்மன் தங்கராசு விரைவில் சுரங்கப்பாதை பணியை துவங்கவேண்டும் என வலியுறுத்தினார். 

மண்டல மேலாளர் வைத்தியலிங்கம்  கூறும்போது,

                   "ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கவும், கடலூர் வழியாக செல்லும் ரயில்கள் திருப்பாதிரிப்புலியூரில் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும்' என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior