அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில், "அகராதி' என்ற ஆன்-லைன் தமிழ் டிக்ஷனரி உருவாக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர்ஜவகர் நேற்று கூறியதாவது:
அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில், "அகராதி' என்ற ஆன்-லைன் தமிழ் டிக்ஷனரி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் வார்த்தையின் அர்த்தம், உபயோகம், இணையதள பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெறலாம். இந்த ஆன்-லைன் தமிழ் டிக்ஷனரியை அண்ணா பல்கலைக்கழக கம்ப்யூட்டர் சயின்ஸ் மையத்தின் பேராசிரியர்கள் உருவாக்கியுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில், சரக்கோ என்ற தமிழ் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. எம்.ஐ.டி., வளாகத்திலுள்ள ஏ.யு.,- கே.பி.சி., ஆராய்ச்சி மையம் இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இதில் தமிழ் மொழியில் பல்வேறு தகவல்கள் தரப்பட்டுள்ளன. மேலும் தமிழ் மொழியில் தேடல் இயந்திர வசதியும் இந்த இணையதளத்தில் உள்ளது. இவ்வாறு மன்னர்ஜவகர் தெரிவித்தார்.
“அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில், சரக்கோ என்ற தமிழ் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது” என்று அதன் துணைவேந்தர் கூறியுள்ளார். அதன் இணையதள முகவரியை வெளியிடவும். நன்றி. வாழ்க வளமுடன்.
அன்புடன்..........இரா. விஸ்வநாதன்.
anna university tamil agaraadhi
http://www.agaraadhi.com/d/DH.jsp