கடலூர்:
கடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோ.அய்யப்பன் தனது சொந்த நிதியில் இருந்து | 5 லட்சத்தில், கல்லூரி மற்றும் பள்ளிகளில் அறக்கட்டளைகளை உருவாக்கி இருக்கிறார். கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் செம்மொழித் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழாவும், பேச்சுக் கலைப் பயிலரங்கமும் வியாழக்கிழமை நடந்தது.
விழாவில் அய்யப்பன் எம்எல்ஏ பேசுகையில், "
இக்கல்லூரியில் விழாக்கள் நடத்தி மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கும் வகையில், "டாக்டர் கலைஞர் தமிழ் செம்மொழி அறக்கட்டளை' என்ற அமைப்பை உருவாக்கி, அதற்குத் தேவையான நிதி |1 லட்சத்தைத் எனது சொந்த நிதியில் இருந்து வழங்குகிறேன்' என அறிவித்து, அந்தத் தொகையை உடனேயே வழங்கினார். மேலும் கடலூர் வண்டிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, திருப்பாப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, முதுநகர் பிலோமினாள் மேல்நிலைப் பள்ளி, கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றுக்கும், தலா 1 லட்சத்தை தனது சொந்த நிதியில் இருந்து வழங்கி, டாக்டர் கலைஞர் தமிழ் செம்மொழி அறக்கட்டளைகள் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் அய்யப்பன் தெரிவித்தார்.
கல்லூரி விழாவுக்கு தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் தமிழாழி கொற்கை வேந்தன் தலைமை வகித்தார்.விழாவை கல்லூரி முதல்வர் பேராசிரியர் ரங்கநாதன் தொடங்கி வைத்தார். புதுவை காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மைய தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர் இளங்கோ சிறப்புரை நிகழ்த்தினார். பேராசிரியர் அர்த்தநாரி வரவேற்றார். முனைவர் குமரன் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக