கடலூர்:
சுதந்திர தினத்தை முன் னிட்டு அனைத்து ஊராட் சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என கலெக்டர் சீத்தாராமன் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும். கூட்டத்தின் விபரம், நடைபெறும் இடம், நேரம், விவாதிக்கப்படவுள்ள பொருள் கள் பற்றி ஊராட்சி மன்ற கட்டடத்திலும், தொலைக் காட்சி அறையிலும், சமுதாயக்கூடத்திலும் மக்கள் பார்வைக்கு விளம்பர பலகையில் எழுதி வைக்க வேண்டும்.
வரும் 15ம் தேதி கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்படவேண்டிய பொருள்கள் ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கூடுதல் பணிகள் தேர்வு செய்திடவும், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்து அங்கீகாரம் செய்தல், ஊரக, பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடத்துவது குறித்து விவாதிக்க வேண்டும். பொது நிதியிலிருந்து குடிநீர், மின்சாரம்,பொது சுகாதாரம், செலவின் அறிக்கை சபையில் படித்து ஒப்புதல் பெற வேண்டும்.
கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கணக்கெடுக்கப்பட்ட பட்டியலை பார்வைக்கு வைப்பது, ஊராட்சி மன்றத் தலைவரால் அல்லது ஊராட்சி மன்ற தலைவரின் அனுமதி பெற்ற உறுப்பினர்களால் கொண்டு வரப்படும் இதர பொருள்கள் பற்றி விவாதிக்க வேண்டும். இந்த பணிகளை மேற்பார்வையிட ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் ஒரு பற்றாளர் அனுப்பப்படுவார். கூட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள், சுய உதவிக்குழுவினர், கிராம மக்கள் பங்கேற்க வேண் டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக