நடுவீரப்பட்டு:
அரசு நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முதலாவதாக உள்ளது என அமைச்சர் பன்னீர் செல்வம் பேசினார்.
சி.என். பாளையத்தில் நடந்த அரசு விழாவில் அமைச்சர் பன்னீர் செல்வம் பேசியது :
சி.என். பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியை பொதுமக்கள் கோரிக்கை வைப்பதற்கு முன்பாக நானே முன் வந்து தரம் உயர்த்திட நடவடிக்கை எடுத்தேன். 1996ம் ஆண்டு நெல்லிக் குப்பம் தொகுதி இடைத் தேர்தல் நடந்தபோது தொகுதி முழுவதும் 15 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடந்தன. அதில் சி.என். பாளையம் பகுதியில் 1 கோடி ரூபாய் பணிகள் நடந்தன.நமது முதல்வர் கிராம பகுதிகள் மற்றும் நகரங்களில் பாலம் கட்டி மக்கள் மனதில் இடம் பெற வைத்துள்ளனர். இந்த பாலம் இரண்டு ஊராட்சியை இணைக்கும் பாலம் என்பதால் நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது.
கொள்ளிடத்தில் 48 கோடி ரூபாய் மதிப்பிலும், நொச்சிக்காடு பகுதியில் 10 கோடி ரூபாய் மதிப்பிலும் பாலம் கட்டப்பட்டு வருகிறது.கருணாநிதி ஆட்சியில் சாதனைகள் பல நடந்து வருகின்றது. ஜெ., ஆட்சியில் சி.என்.பாளையம் ஊராட்சியில் ஏதாவது நலத்திட்டங்கள் வழங்கப்பட்டதா என எண்ணிப் பாருங்கள். இந்த அரசு சொன்னதை செய்யும் என பேசினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக