சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொழில் முறைக்கல்வி பள்ளி ஆசிரியர்கள் பயிலக துவக்க விழா நடந்தது.
தேசிய தொழிற்பயிற்சி ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி குழும பண்டிட் சுந்தர்லால் தொழில் முறைக்கல்வி மற்றும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வணிகவியல் துறை சார்பில் கணக்குப் பதிவியல் மற்றும் தணிக்கை பாடங்களில் தொழில் முறைக்கல்வி குறித்த சிறப்பு முகாம் துவங்கியது. துணை வேந்தர் ராமநாதன் தலைமை தாங்கினார். பேராசிரியர் சந்திரமோகன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் முத்துராஜ் நிலையத்தின் செயல்பாடு மற்றும் நோக்கம் குறித்துப் பேசினார். நிகழ்ச்சியில் பேராசிரியர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பேராசிரியர் சங்கர் நன்றி கூறினார். தென் மாநிலம் முழுவதிலும் இருந்து 30 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக