சிதம்பரம்:
பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பெய்து வரும் மழைநீர் கருவாட்டுஓடை வழியாக வடவாற்றில் கலந்து வருவதால் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.கடலூர் மாவட்டம் வீராணம் ஏரிக்கு கீழணையிலிருந்து வடவாறு வழியாக குறைந்தளவே தண்ணீர் அனுப்பப்பட்டதால் ஏரி நிரம்பாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்த மழைநீர் கருவாட்டுஓடை வழியாக வடவாற்றில் கலந்து வீராணம் ஏரிக்கு செவ்வாய்க்கிழமையிலிருந்து கூடுதலாக நீர் வருகிறது. வடவாறு வழியாக விநாடிக்கு 1300 கனஅடி நீர் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.இதனால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயரத் தொடங்கியுள்ளது. இன்னும் ஒரிரு தினங்களில் ஏரி முழுக்கொள்ளளவை எட்டும் என எதிர்பாக்கப்படுகிறது. இதனால் புதன்கிழமை நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 44.60 அடியை எட்டியுள்ளது. மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். சென்னை குடிநீருக்கு விநாடிக்கு 73 கனஅடி நீர் ஏரியிலிருந்து வெளியேற்றப்படுகிறது.
பாசனத்திற்கு நீர் நிறுத்தம்:
சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால் வீராணம் ஏரியிலிருந்து பாசனத்துக்கு நீர் திறந்துவிடப்படுவது தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் மழைநீரே போதும். ஏரி நீரும் சேர்ந்து வந்தால் நாற்று மூழ்கிவிடும் என விவசாயிகள் தெரிவித்தின் பேரில் ஏரியிலிருந்து பாசனத்க்காக திறந்துவிடப்பட்ட நீர் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக