உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், செப்டம்பர் 16, 2010

தேர்வு முடிந்ததும் இணையதளத்தில் விடை: சட்டப் பல்கலைக்கழகம் புது முடிவு

               தேர்வு முடிந்ததும், கேள்விகளுக்கான விடைகளை இணையதளத்தில் வெளியிடும் புதிய திட்டத்தை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது

                  .விடைத்தாள் திருத்தும் பணியில் ஏற்படும் குளறுபடியை போக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மதிப்பெண் தொடர்பாக சட்டக் கல்லூரி மாணவர்கள் தொடர் புகார்களைத் தொடர்ந்து, பல்கலைக்கழகம் இந்தப் புதிய நடைமுறையை கொண்டுவந்துள்ளது.பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்துள்ள 7 சட்டக் கல்லூரிகளில் அடுத்தப் பருவம் முதல் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்  பல்கலைக்கழக துணைவேந்தர் விஜயகுமார் அளித்த பேட்டி:

                   பருவத் தேர்வுகளை சிறப்பாக எழுதியபோதும், ஆசிரியர்கள் மதிப்பெண்ணை குறைத்து வழங்குகின்றனர் என சட்டக் கல்லூரி மாணவர்கள் சிலர் புகார் தெரிவித்தனர். மருத்துவம், பொறியியல் மற்றும் கலை, அறிவியல் பட்டப் படிப்புகளில் தேர்வில் கேட்கப்படும் ஒரு கேள்விக்கு இதுதான் பதில் என அறுதியிட்டு கூறிவிட முடியும். ஆனால், சட்டப் படிப்பை பொறுத்தவரை, கேள்விக்கு இதுதான் பதில் என உறுதியாக கூற முடியாது. இதன் காரணமாகவே, விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கேள்வித் தாளை தயாரிக்கும் ஆசிரியரே, அந்தக் கேள்விகளுக்கான விடைகளையும் தனியே தயாரித்து தர வேண்டும் என்ற புதிய நடைமுறை கொண்டுவரப்பட உள்ளது.இந்த விடைகள் அனைத்தும், தேர்வு முடிந்த ஒருசில நிமிஷங்களில், பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும். 

                              இதன் மூலம் தாங்கள் தேர்வு எவ்வாறு எழுதியுள்ளோம், எவ்வளவு மதிப்பெண் கிடைக்கும் என்பதையும் மாணவர்கள் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள முடியும்.விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும், கேள்விக்கான பதில் இதுதான் என்பதை தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும். இதன் மூலம் குளறுபடிகள் முற்றிலுமாக களையப்படும்.இந்தத் திட்டம் அடுத்த பருவத் தேர்வு முதல் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior