உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், செப்டம்பர் 16, 2010

கடலூர் திருவந்திபுரத்தை சுற்றுலாத் தலமாக்க அமைச்சர்கள் ஆய்வு

கடலூர்:

               கடலூர் திருவந்திபுரத்தை சுற்றுலாத் தலமாக்குவது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர் கண்ணைக் கவரும் இயற்கைச் சூழலும், தேவநாதசுவாமி கோயில், ஹயகிரீவர் கோயில் , திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோயில், விலங்கல்பட்டு முருகன்கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களும் அமையப் பெற்றது, திருவந்திபுரம் கேப்பர் மலைப் பகுதியாகும். 

                           கெடிலம் ஆறு தேவநாதசுவாமி கோயில் அருகே வடக்கில் இருந்து தெற்கு நோக்கி ஓடுவது சிறப்பு அம்சமாகக் கருதப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க திருவந்திபுரம் கேப்பர் மலைப் பகுதியைச் சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என்பது, இப்பகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கை. இக்கேôரிக்கையை வலியுறுத்தி, கடலூர் அனைத்து நகர் குடியிருப்போர் நலச்சங்கக் கூட்டமைப்பு மனிதச்சங்கிலிப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கிறது. இந்த நிலையில், திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலில்  ஞாயிற்றுக்கிழமை ஒரு நாளில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட திருமணங்களும், அதே நாளில் திருவந்திபுரம் திருமண மண்டபங்களில் 50-க்கும் மேற்பட்ட திருமணங்களும் நடந்தன. இதனால் திருவந்திபுரம் பகுதியில் 4 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது. தேவநாதசுவாமி கோயிலுக்கு ஆண்டுக்கு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தமிழகத்தில் இருந்து மட்டுமன்றி பிற மாநிலங்களில் இருந்தும் வந்து போகிறார்கள்.

                         எனவே திருவந்திபுரத்தை சுற்றுலாத்தலமாக்குவது குறித்தும், அங்கு விழாக் காலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பது குறித்தும், திருவந்திபுரம் சென்று அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வெள்ளக்கேôவில் சாமிநாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.முதல் கட்டமாக திருவந்திபுரத்திலும், கேôயிலைச் சுற்றியும் ஆக்கிரமித்து கடை வைத்து இருப்பவர்களை அப்புறப்படுத்தவும், அவர்களுக்கு வணிக வளôகம் ஒன்று கட்டிக் கெôடுக்கலாம் என்றும் அமைச்சர்கள் ஆலேôசனை தெரிவித்தனர்.சாலைகளை அகலப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. இது குறித்தும் சுற்றுலாத் தலமாக்குவது குறித்தும், தெôடர் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் உத்தரவிட்டனர்.இதில் கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு, நெடுஞ்சாலைத்துறை செயலர் சந்தானம் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

நெடுஞ்சாலைப் பணிகள்:

அமைச்சர்கள் ஆய்வு

                           கடலூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை பணிகளை செவ்வாய்க்கிழமை அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வெள்ளக் கோவில் சாமிநாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.கடலூர் மாவட்டத்தில் 2010-11-ம் ஆண்டில் 731.49 கி.மீ. நீளச் சாலைகள்  580 கோடியிலும், 34 பாலங்கள்  244.47 கேôடியிலும் நடைபெற்று வருவதை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். இப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் உத்தரவிட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் சேவை வளாகத்தில் நடந்த இந்த ஆய்வில் தலைமைப் பொறியாளர் பாலாஜி, எம்.எல்.ஏ.க்கள் கோ.அய்யப்பன், சபா.ராஜேந்திரன், ரவிக்குமார், நகராட்சித் தலைவர்கள் து.தங்கராசு (கடலூர்), பச்சையப்பன் (பண்ருட்டி) உள்ளிட்டேôர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior