கடலூர்:
கடலூர் துறைமுகத்தில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசினார்.
கடலூரில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசியது:
கடலூர் துறைமுகம் ஏணிக்காரன் தோட்டம் சுனாமி நகரில் இருந்து முதுநகரை இணைக்க உப்பனாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும். கடலூர் துறைமுகம் மீன் இறங்கு தளத்தில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைத்து உதவிட வேண்டும்.
கடலூர் துறைமுகப்பகுதி முகத்து வாரம் குறைவான ஆழமும், குறைந்த அக லமும் உள்ளதால் அப்பகுதியில் அடிக்கடி படகுகள் விபத்துக்குள்ளாகி ஆண்டிற்கு இரண்டு அல்லது மூன்று மனித உயிரி ழப்பு ஏற்படுகிறது. எனவே முகத்துவா ரத்தை ஆழப்படுத்த வேண்டும். கடலூர் நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைத்திட மிகவும் சேதம் அடைந்துள்ள ஜவான்ஸ் பவன் சாலையை புதிய தார்சாலையாக மாற்றித்தரவேண்டும். இவ்வாறு எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக