கடலூர்:
கடலூர் கேப்பர் மலையில் உள்ள மத்திய சிறைச் சாலையில் மகாகவி பாரதியார் நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இந்திய விடுதலைக்காக தனது எழுத்துக்கள் மூலம், மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியவர் மகாகவி பாரதியார். எனவே அவரை பிரிட்டிஷ் அரசு கைது செய்ய முயன்றபோது பாரதியார், பிரெஞ்சு ஆட்சிக்குள் இருந்த புதுவைக்கு வந்து, தனது எழுச்சிமிகு எழுத்துப் பணியைச் செய்துவந்தார். ஒருமுறை தமிழகப் பகுதிக்கு வந்த பாரதியாரை ஆங்கிலேய அரசு கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தது. பாரதியார் கடலூர் சிறையில் 20-11-1918 முதல் 14-12-1918 வரை சிறைவாசம் அனுபவித்ததாக, சிறைச்சாலைக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. எனவே பாரதியாருக்கு கடலூர் மத்திய சிறையில் சிலை வைக்கப்பட்டு உள்ளது.
பாரதியார் அடைக்கப்பட்டு இருந்த அறை இரு ஆண்டுகளுக்கு முன் நூலகமாக மாற்றப்பட்டு உள்ளது. சனிக்கிழமை பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு, சிறைச்சாலைக் கண்காணிப்பாளர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சிறை அலுவலர் (பொறுப்பு) வேணுகோபால் மற்றும் சிறைக் காவலர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.÷சிறைச் சாலைக்குள் உள்ள அவரது நினைவு அறைக்குச் சென்று பாரதியார் படத்துக்கும் மாலை அணிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக