உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, அக்டோபர் 29, 2010

நவம்பர் 1-ல் சோழன் விரைவு ரயில் இயக்கம்

பண்ருட்டி:

                   சென்னை- திருச்சி இடையே சோழன் விரைவு ரயில் நவம்பர் 1-ம் தேதி முதல் இயங்க உள்ளது. இந்த வண்டி பண்ருட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என பண்ருட்டி ரயில் பயணிகள் நலச்சங்கத் தலைவர் டி. சண்முகம் தெரிவித்துள்ளார். 

பண்ருட்டி ரயில் பயணிகள் நலச்சங்கத் தலைவர் டி. சண்முகம்  விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது: 

                          பொது மக்கள் நலன் கருதி 1.11.2010 முதல் சென்னையிலிருந்து திருச்சிக்கும் (6853) அதேபோல் மறு மார்கத்தில் இருந்தும் (6854) சோழன் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பண்ருட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.  சென்னை எழும்பூரில் இருந்து காலை 8.20 புறப்படும் இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம் வழியாக பண்ருட்டிக்கு 11.40 வந்து பின்னர் கடலூர், சிதம்பரம், சீர்காழி, வைதீஸ்வரன்கோயில், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக திருச்சிக்கு மாலை 4.35 சென்று அடையும். 

                        இதேபோல் திருச்சியில் இருந்து 9.15 புறப்படும் ரயில் மேற்கண்ட ஊர்கள் வழியாக பண்ருட்டிக்கு மதியம் 1 மணி அளவில் வந்து மாலை 5.45 மணி அளவில் சென்னை எழும்பூர் சென்று அடையும். நீண்ட நாட்களுக்குப் பின்னர் 1.11.2010 அன்று காலை 11.30 மணிக்கு பண்ருட்டி வரும் சோழன் விரைவு ரயிலை வரவேற்று வழி அனுப்பி வைக்க பண்ருட்டி ரயில் பயணிகள் நலச்சங்கம் ஏற்பாடு செய்துள்ளதாக டி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior